CATEGORIES
Categorías
வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் பருவநிலை நிதி
வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து அஜர்பைஜானில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு (சிஓபி29) மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பருவநிலை நிதி தொடர்பான உயர் நிலை நிபுணர் குழுவின் புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏழைகளின் எதிரி காங்கிரஸ்: பிரதமர் மோடி
'ஏழைகள் முன்னேறிவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் மனநிலை; அக்கட்சி, ஏழைகளின் எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து
சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நேரு பிறந்த தினம்: பிரதமர், தலைவர்கள் மரியாதை
நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வியாழக்கிழமை (நவ.14) மரியாதை செலுத்தினர்.
கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கர்நாடக அமைச்சரவை முடிவு
முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது
உலகளாவிய மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் சீராகப் பயணிக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்ட புத்தகத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை: ராகுல்
‘அரசமைப்பு சட்ட புத்தகத்தைப் படிக்கவில்லை என்பதாலேயே, அதை வெற்றுப் புத்தகமாக பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மறு ஆய்வு அலுவலர்கள் (ஆர்ஓ) மற்றும் உதவி மறு ஆய்வு அலுவலர்களுக்கான (ஏஆர்ஓ) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்
இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
உத்தர பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறையின் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்தியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சம்பா பருவ பயிர்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை
சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ள நிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்; தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 16) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது
டொமினிகா காமன்வெல்தின் உயரிய விருதான ‘டொமினிகா மரியாதை விருதை’ பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப்பின் வெற்றியும் எதிர்பார்ப்பும்!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 20,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். அதன் முடிவு எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காணாமற்போன கிராம ‘கதாபாத்திரங்கள்’
அன்றைய மக்கள் வேளாண் தொழிலோடு இயைந்து வாழ்ந்ததால் விதைப்பு காலம் தொடங்கி அறுவடைக்காலம் முடியும் வரை பகல் நேரத்தில் காடுகளில் உழைப்பவர்களாக இருந்தனர்.
தொழில் பூங்காவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
நாகையில் தொழில் பூங்காவுக்கு செல்லூரில் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அரசுப் பள்ளிகள் ஆய்வறிக்கை முதல்வரிடம் விரைவில் சமர்ப்பிப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
லஞ்ச வழக்கு: வட்டாட்சியர், துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறை
வருவாய்துறை சான்றிதழ்களை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
மத்திய சிறை சிறப்பு முகாமில் சீனக் கைதிகள் 2 பேரிடம் அமலாக்கத் துறை விசாரணை
இணையவழி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள சீனக் கைதிகள் இருவரை அமலாக்கத்துறையினர் வியாழக்கிழமை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம்
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். செளத்ரி முன்னிலையில், 80 கி.மீ. வேகத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நமது கனவுகளை குழந்தைகள் மீது ஏற்ற வேண்டாம்: முதல்வர்
நமது கனவுகளை குழந்தைகளின் மீது ஏற்ற வேண்டாம் என்று பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு 99 % சலுகைகள் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திமுக ஆட்சியில்தான் அரசு ஊழியர்களுக்கு 99 சதவீத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து, தமிழக முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீடு ஏற்பு
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் குற்றவாளிகளை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
54 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: கேமரூன் நாட்டவர் உள்பட 4 பேர் கைது
மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த, கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
எலி மருந்தால் விபரீதம்: 2 குழந்தைகள் உயிரிழப்பு
வீட்டில் எலி யைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மருந்திலிருந்து வெளியேறிய நெடியால், 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் தொடக்கம்
சென்னை தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) மற்றும் இதய கண்காணிப்பு பிரிவு (கரோனரி கேர் யூனிட்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை
50 வயதை எட்டிய சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.