CATEGORIES
Categorías
பெரியாறு அணை பகுதியில் பருவமழை துவங்கியது
பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் இடியுடன் கனமழை
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டியது. வெள்ளிக்கிழமை காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் பரவலாக மழை பெய்தது.
நிவாரணம், உரிய விலை கிடைக்க மா விவசாயிகள் கோரிக்கை
மா விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் உரிய விலை கிடைக்க உதவ வேண்டும் என முதல்வருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் திட்டபணிகள் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
முட்டை விலை 515 காசாக நிர்ணயம்
நாமக்கல், ஜூன் 4 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, 10 காசு உயர்ந்து, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தக்காளி விலை சரிவு
இராமநாதபுரம், ஜூன் 4 திருவாடானை பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
விவசாயிகள் நெற் பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்
வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்
ரூ.2.86 கோடிக்கு காய்கறி நேரடி விற்பனை
திருவள்ளூர், ஜூன் 4 ஊரடங்கில் 1,233 காய்கறி வாகனங்களில், வீடு வீடாக சென்று, ரூ.2.86 கோடி மதிப்பிலான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ஊட்டி, ஜூன் 3 கொரோனா காலத்தில் பிற தொழில்கள் நலிவடைந்த போதும், நீலகிரியில் தேயிலை உற்பத்தி 18.48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
முள்ளங்கி விலை உயர்வு
தர்மபுரி, ஜூன் 3 முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன் 3 மேட்டூர் அணையிலிருந்து 2021-2022ம் ஆண்டிற்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டுகோள்
புதுக்கோட்டை, ஜூன் 3 புதுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை நெல் சாகுபடி விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் அமைத்திட வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வாழையில் சாம்பல் (பொட்டாசியம்) சத்து பற்றாக்குறை
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் தென் பெண்ணை ஆற்றங்கரையின் ஒர பகுதியில் உள்ள கிராமங்களில் வாழை சாகுபடி செய்வது வழக்கம்.
மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள்
வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை
கன மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
சென்னை, ஜூன் 2 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காளான் சாகுபடி தொழில் நுட்ப இணையதள வழி பயிற்சி நிறைவு
சேலம், ஜூன் 2 சேலம் மாவட்டம், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், நடத்திய காளான் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய இணையதள வழி பயிற்சி 02.06.2021 (புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.30 வரை நடைபெற்றது.
கடந்த வருடத்தை விட 12.70% அதிக கோதுமை கொள்முதல்
புது தில்லி, ஜூன் 2 தற்போதைய ராபி சந்தைப்படுத்துதல் பருவம் 2021-22-ன் போது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், தில்லி , இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கோதுமை கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும்
வானிலை முன்னெச்சரிக்கை தகவல்
பாபநாசம் அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. காரையாறு அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 75,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.
கொரோனா நெருக்கடியில் விவசாயிகளுக்கு உதவும் நேரடி நெல் விதைக்கும் கருவி
நெல் சாகுபடிப் பணிகளில் பெரும்பாலும் மனிதர்களே உழுவது முதல் அறுவடை வரை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், தற்பொழுது கொரோனாவின் பாதிப்பால் தொழிலாளர்கள் வெளிய வர முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் ஆள்பற்றாக்குறை, அதிகக் கூலி காரணமாக, உற்பத்திப் பாதிப்பு மற்றும் போதிய வருவாய் இன்மையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கோபால் ரத்னா விருது கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான தேசிய விருது அறிமுகம்
மீன்வளம் மற்றும் பால் வள அமைச்சர் கிரிராஜ் சிங், காணொலி வாயிலான கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நாள் உலக பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காளான் சாகுபடி தொழில் நுட்பங்கள் இணையதள வழி பயிற்சி
சேலம் மாவட்டம், சந்தியூர், மாவட்ட வேளாண் வானிலை மையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய இணையதள வழி பயிற்சி வரும் 02.06.2021 (புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் 11.30 வரை நடைபெற உள்ளது.
வெற்றிலை விற்பனை பாதிப்பால் விவசாயிகள் வேதனை
தேனி, மே 31 கரோனா பொதுமுடக்கத்தால் வெற்றிலையை விற்பனை செய்ய முடியாமல் தேனி மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருமயம் வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குநர் கள ஆய்வு
புதுக்கோட்டை, மே 31 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் -3 வட்டாரத்தில் வேளாண்மை துனை இயக்குநர் (மத்திய அரசுத் திட்டம்) வி.எம்.ரவிச்சந்திரன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார்.
விளைந்த வாழைக்கு விலையில்லை நிலைகுலைந்த வாழை விவசாயிகள்
விழுப்புரம், மே 31 வாழை விவசாயிகளை 'வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்' என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப வாழை விவசாயிகளின் நிலை மாறியுள்ளது.
புரதம், நார் சத்து மிகுந்த கிராமத்து அரிசி கானா, ஏமனுக்கு ஏற்றுமதி
புது தில்லி, மே 31 இந்தியாவில் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 4.5மெட்ரிக் டன் 'கிராம அரிசியை உதயா வேளாண் பண்ணை என்ற புதுமை நிறுவனம் விமானம் மற்றும் கப்பல் வழியாக கானாவிற்கும், ஏமனுக்கும் சனிக்கிழமை (மே 29) ஏற்றுமதி செய்தது.
இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
ஈரோடு, மே 31 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் உரக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்துள்ளார்.
புயல் மழையால் பயிர்கள் பாதிப்பு வேளாண் துறை கணக்கீடு
சென்னை, மே 29 கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.