வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு..
Dinakaran Chennai|October 04, 2024
'ஒரு மழைக்கே தாங்காது சென்னை' என்ற நிலையை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு முற்றிலுமாக மாற்றி காட்டும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு..

மழைக்காலம் வந்துவிட்டாலே சென்னைவாசிகளுக்கு ஒருவித அச்ச உணர்வு மேலோங்குவது வழக்கம். அந்த அளவுக்கு சிறு மழைக்கே சாலைகளில் வெள்ளம் வழிந்தோடும் காலம் இருந்து வந்தது. இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

அதன் எதிரொலியாக சென்னை நகர் முழுவதும் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல பலன் கிடைத்தது. இந்த நடவடிக்கையை அரசியல் கடந்து பலரும் பாராட்டினர். ஆனால் பெருமழை வந்த போது சென்னை நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற முடியாமல் தவித்தது.

இதற்கு காரணம், வெள்ள நீர் வெளியேற்றும் பணியில் முக்கிய பங்காற்றக் கூடிய கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கரை புரண்டோடிய வெள்ளம் தான். இதனால், இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலம் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆறுகளில் தண்ணீர் குறைந்ததும் தேங்கிய மழைநீர் வேகமாக வடிந்தது. எனவே மழைநீர் வடிகால் திட்டம் சென்னை நகருக்கு மிகப் பெரிய பலனை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சிறுமழை காலங்களை சாதாரணமாக இந்த மழைநீர் வடிகால்கள் சமாளித்து வருகிறது. ஆனால் சில இடங்கள் தாழ்வாக அமைந்துள்ளதால் அங்கிருந்து வெள்ள நீரை வெளியேற்றுவது சவாலானதாக உள்ளது.

இதனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட பின்பு, எங்கெல்லாம் மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது என்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் 320 இடங்கள் தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக மழைப் பொழிவு இருக்கும்போது இந்த இடங்களில் தண்ணீர் வழிந் தோட 3 நாட்கள் வரையில் ஆவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற இடங்களில் மழை பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

Esta historia es de la edición October 04, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு கேரள வாலிபரிடம் விசாரணை
Dinakaran Chennai

நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு கேரள வாலிபரிடம் விசாரணை

நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மீது செருப்பு வீசிய கேரள வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலையம்
Dinakaran Chennai

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலையம்

ஸ்டேடியம் வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடிவு

time-read
1 min  |
February 27, 2025
வடசென்னை மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது கொளத்தூரில் ₹210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனை
Dinakaran Chennai

வடசென்னை மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது கொளத்தூரில் ₹210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கூட்டம் குறையும்

time-read
4 minutos  |
February 27, 2025
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு. 12ம் வகுப்பு தேர்வு வரைவு திட்டம் வெளியீடு
Dinakaran Chennai

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு. 12ம் வகுப்பு தேர்வு வரைவு திட்டம் வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான 2026ம் கல்வி ஆண்டின் பொதுத் தேர்வு வரைவுத்திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020ல் சேர்த்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

time-read
2 minutos  |
February 27, 2025
Dinakaran Chennai

தனுஷ் பற்றி அவதூறு பரப்பிய இந்தி நடிகர் மும்பை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்

பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், 2017 மற்றும் 2024 க்கு இடையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்ஐஆர்களை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனுவில் கான், “தவறாகவும் தீங்கிழைக்கும் விதமாகவும் இந்த வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட ஒரு அப்பாவி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
ஜே.பி நட்டாவுக்கு பதில் பா.ஜ புதிய தலைவர் யார்?
Dinakaran Chennai

ஜே.பி நட்டாவுக்கு பதில் பா.ஜ புதிய தலைவர் யார்?

முடிவு எடுக்க முடியாமல் திணறும் மோடி

time-read
1 min  |
February 27, 2025
அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு’ விசா
Dinakaran Chennai

அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு’ விசா

அமெரிக்காவில் குடியுரிமை பெற ₹43 கோடி கொடுத்தால் ‘கோல்டு கார்டு’ விசா வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 27, 2025
Dinakaran Chennai

உலகிலேயே மிகப்பெரிய ஒன்றுகூடல் மகா கும்பமேளா நிறைவடைந்தது

உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 45 நாட்கள் நடந்த கும்பமேளாவில், 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

time-read
2 minutos  |
February 27, 2025
டெல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்பி போட்டி மாநிலங்களவை உறுப்பினராக கெஜ்ரிவால் திட்டம்?
Dinakaran Chennai

டெல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்பி போட்டி மாநிலங்களவை உறுப்பினராக கெஜ்ரிவால் திட்டம்?

டெல்லியில் லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏவான குர்பிரீத் பாஷி கோகி அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

time-read
1 min  |
February 27, 2025
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு நிதியுதவி
Dinakaran Chennai

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு நிதியுதவி

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

time-read
1 min  |
February 27, 2025