அதிகாலை முதல் அதிகனமழை கொட்டும்
இதனால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப்பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் அதி கன மழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக வடதமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்தாலும் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
ஆனால் வடசென்னையில் புளியந்தோப்பு, ஓட்டேரி, எண்ணூர், திருவொற்றியூர் மற்றும் சூளை மேடு, ஆசாத்நகர், கோடம் பாக்கம், அசோக்நகர், எம்எம்டிஏ, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. தொடர் மழையால் தண்ணீர் வடிவதில் சிரமம் உள்ளது. ஆனாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைவதால், இன்று காலை மற்றும் நாளை வரை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் கான தலைவர் பாலச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் 130 மிமீ மழை பதிவாகியுள்ளது.
Esta historia es de la edición October 16, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 16, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னையில் 3000 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 இடங்களில் கொட்டகை அமைக்கும் பணி தீவிரம்
மாநகராட்சி நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை வரிசைப்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்
சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி .
அசாமில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்து, இதுதொடர்பாக, 2 பெண்களை கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்ட் குவாரிகள் தடை செய்யப்படுமா?
மணல் லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பார்ட்
காரில் கடத்தி வந்து சென்னையில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்ற 4 வாலிபர்கள் கைது
புழல் அருகே காரில் கடத்தி வந்து சென்னை பகுதிகள் உள்ள சிறு சிறு கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், 110 கிலோ குட்கா, 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ்
தாதுமணல் கொள்ளை சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.