வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்களர் பட்டியலின் அடிப்படையில், சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக வேளச்சேரியில் 3.12 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக எழும்பூரில் 1.76 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடுவது நடைமுறையாக உள்ளது. அந்த வகையில், வரும் ஜனவரி 1ம் தேதி, 18 வயது நிறைவு அடையும் நாளை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்த செயல்களை எளிதாக்க நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான 2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரித்விராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் துறை அலுவலர் (தேர்தல்) பி.சுரேஷ் மற்றும் திமுக சார்பில் சந்துரு, அதிமுக சார்பில் பாலகங்கா, காங்கிரஸ் சார்பில் சந்திரமோகன், எஸ்.கே.நவாஸ், தேமுதிக சார்பில் நல்லதம்பி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கருணாநிதி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து ெகாண்டனர்.
Esta historia es de la edición October 30, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 30, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
விவாகரத்து கோரி மனு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு அனுமதி - ஐகோர்ட் உத்தரவு
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தனது ஆவண படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதானி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பேசுவோம் - திருமாவளவன் பேட்டி
விபி சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
சிறு குற்றத்துக்காக ஏராளமானோர் சிறையில் அடைப்பு அதானியை கைது செய்யாதது ஏன்? - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி
நாட்டில் சிறிய குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் சிறையில் இருக்கையில்,அதானியை ஏன் கைது செய்யவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது
2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடக்கம். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது
தமிழ்நாட்டில் 4 நாள் சுற்றுப்பயணம் ஜனாதிபதி முர்மு ஊட்டி வந்தார்
மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் பயணம் ரத்து சாலை மார்க்கமாக ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றார்
இருவரும் மனமுவந்து மனு தாக்கல் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றனர் - சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவகாரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இலவச லேப்டாப் வழங்குவதாக பரவி வரும் செய்தி தவறானது
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக விளம்பரம் ஒன்று சமூகவலைதளங்களிலும், இணையதளங்களிலும் பரவி வருகிறது. இதுதொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., கவனத்துக் கொண்டுவரப்பட்டது.
புதுப்பொலிவுடன் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் புத்தம் புதிய பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிச.2 முதல் செய்முறைத் தேர்வு
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.