சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.85 கோடி செலவில் முதல்வர் படைப்பகம், ரூ.80.90 லட்சம் செலவில் 3 பல்நோக்கு மைய கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். அத்துடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 77 மின்மாற்றி தடுப்புகள் அமைக்கும் பணி, ரூ.43 லட்சம் செலவில் மகளிர் உடற்பயிற்சி கூடம், ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் ஆகிய பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ஜி.கே.எம். காலனியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் குளம் சீரமைக்கப்படும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 107 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், 350 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும், கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற 2493 நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும், பல்வேறு அரசு வேலையாக இருந்தாலும், கட்சி வேலைகளாக இருந்தாலும் அதற்கிடையில் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். அதிலும் கொளத்தூருக்கு மட்டுமல்ல, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நிகழ்ச்சி என்று சொன்னால், அதைவிட அதிகமான உற்சாகம் வந்துவிடுகிறது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படிக்கும் மாணவ, மாணவிகளை பார்க்கும்போது எனக்கு தானாக உத்வேகம் வந்துவிடும். அந்த உத்வேகத்தை பெறுவதற்காக நான் அடிக்கடி இங்கு வருவதுண்டு.
கடந்த 2017ம் ஆண்டு தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, நாம் எல்லோரும் தாங்க முடியாத சோகத்திற்கும் பெரிய வேதனைக்கும் ஆளாகினோம். நீட் தேர்வு அவரின் கனவை சிதைத்து – அவரின் உயிரை பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது.
Esta historia es de la edición November 05, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 05, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பேரூராட்சியுடன் ணைக்க எதிர்ப்பு புதுகும்மிடிப்பூண்டி பொதுமக்கள் மனு
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட் சியில் தேவாங்க தெரு, ரெட்டியார் தெரு, கரும் புக்குப்பம் காலனி, வியட் நாம் காலனி, பால யோகி நகர், பாலகிருஷ்ணாபுரம், ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, அருந்ததி யர் காலனி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதமாக பழுதாகி காணப்படும் உயர்கோபுர மின்விளக்கு
பெரியபாளையம் ஊராட் சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி உடன் சென்ற தாய் படுகாயம்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புரோக்கர்களின் வளர்ச்சியால் அழிவை சந்திக்கும் விவசாயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறும் விளைநிலங்கள்
பிளாட் போட்டு விற்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தல்
வண்டலூர் அருகே ஏரியில் சிமென்ட் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தாம்பரத்திலிருந்து 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையோர ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று படி பூஜை நடக்கிறது.
நீண்ட கால கோரிக்கையான இசிஆர் - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்
ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு
தி.நகர் பேருந்து நிலையத்தில் மாநகர பஸ் மோதி மூதாட்டி பலி
டயரில் சிக்கிய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
மாதவரத்தில் 17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது
கட்டிட விதிமீறல் மீது விரைந்து நடவடிக்கை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.