ஆனால், தற்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே இருப்பதாகவும், பெருகி வரும் குடியிருப்பு கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணி, மேம்பால கட்டுமானம் போன்ற காரணங்களால் சென்னையிலிருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதேபோன்று குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் வளர்க்கப்படும் மரங்களும், மோசமான பராமரிப்பு அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமின்மை, குடிநீர் குழாய்கள், கழிவுநீர் குழாய், மழைநீர் வடிகால் என பல காரணங்களால் அழிக்கப்பட்டு கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், மரம் வளர்ப்பு ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இணைந்த அமைப்பு ஒன்று, சர். பி.டி. தியாகராய சாலை, வெங்கட்நாராயணா சாலை, ஜி.என். செட்டி ரோடு இடங்களில் உள்ள குடியிருப்பு மரங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தது.
அந்த ஆய்வின்படி, இந்த சாலைகளில் 2004ம் ஆண்டில் 317 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருந்தன. மரங்களின் உயிரியல் பெயர்கள், உயரம், அகலம் போன்ற அறிவியல் அம்சங்கள், அதை பாதிக்கும் அம்சங்கள் ஆராயப்பட்டன.
2004 மற்றும் 2024ம் ஆண்டுக்குள் இந்த மூன்று சாலைகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 317ல் இருந்து 327ஆக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், தற்போதைய மரங்களின் எண்ணிக்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவை 201 மரங்கள் மட்டும் தான். 2004 அல்லது அதற்கு முன் நடப்பட்ட 317 மரங்களில் 113 மரங்களை காணவில்லை என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தி.நகர், ஜி.என். செட்டி சாலை மற்றும் தியாகராய சாலையில் அதிக மரங்கள் வளர்ந்துள்ளன. அதேசமயம் வெங்கட்நாராயணா சாலையில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Esta historia es de la edición November 07, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 07, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது