இந்தியாவின் 50வது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 2022 நவம்பர் 9ம் தேதி பதவி ஏற்றார். அவரது பணிக்காலம் நாளை முடிவுக்கு வருகிறது. இந்தநிலையில் அவரது பதவியின் கடைசி பணி நாளான நேற்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து சந்திரசூட் விடை பெற்றார்.
புதிய தலைமை நீதிபதியாக நவ.11ல் பதவி ஏற்க உள்ள சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இருந்த தலைமை நீதிபதி சந்திரசூட், அந்த அமர்வில் இருந்து விடைபெற்றார். அவருக்கு அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் கபில் சிபல் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து சந்திரசூட் பேசுகையில்,’ என்னைத் தொடர்ந்து நடத்துவது எது என்று கேட்டீர்கள்.
இந்த நீதிமன்றம்தான் என்னைத் தொடர்ந்து நடத்த வைத்தது. தேவையில் இருப்பவர்களுக்கும், நீங்கள் சந்திக்காதவர்களுக்கும், உங்களுக்குத் தெரியாத நபர்களுக்கும், அவர்களைப் பார்க்காமலேயே உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் திறன் கொண்டவர்களுக்கும் சேவை செய்வதை விட மேலான உணர்வு எதுவும் இல்லை. இளம் சட்ட மாணவராக இந்த நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்தது முதல் இப்போது தலைமை நீதிபதியாக பதவி வகித்தது வரை பல நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
Esta historia es de la edición November 09, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 09, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தென்கொரியாவில் பொறுப்பு அதிபர் ஹான் டக் சூவும் நீக்கம்
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
வெ.இ.யை ஒயிட் வாஷ் செய்து இந்திய மகளிர் கெத்து!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, 3வது ஒரு நாள் போட்டியிலும் மிக மோசமான தோல்வியை தழுவி ஒயிட் வாஷ் ஆனது.
திருச்சி எஸ்பி தொடர்ந்த சீமான் மீதான அவதூறு வழக்கு
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், திருச்சி 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட புகார் (பிரைவேட் கம்ப்ளைன்ட்) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது விபத்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற போது, ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 47 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
சேரங்கோடு பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஏமனில் திடீர் தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இஸ்ரேல் குண்டு வீச்சில் தப்பினார்
ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மீராபாய் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் அமைச்சர் அர்ஜூன் மேக்வால்
ராஜஸ்தானின் சிகாரில் உள்ள பிப்ராலியில் உள்ள ஸ்ரீ ஷியாம் கோசாலையில் திங்களன்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொண்டார்.
தியேட்டரில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் காணொலி மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ம் தேதி வெளியானபோது ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார்.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் தனிநபர் குடும்ப செலவு 9 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 2023-24ம் நிதியாண்டில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.