தனது தாய்க்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா (50) என்பவர் புற்றுநோய் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோயாளி பிரேமாவுடன் அவரது மகன் விக்னேஷ் (27) உடனிருந்து கவனித்து வந்துள்ளார். அப்போது வார்டுக்கு வரும் டாக்டர்கள் சிகிச்சை முறை குறித்து அவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் விக்னேஷ் தனது தாயாரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு சில நாட்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். புற்றுநோய் முற்றிய நிலையில் இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். இனி உங்கள் அம்மாவை காப்பாற்ற முடியாது என்று அங்கிருந்த டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே விக்னேஷின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்த அவர், மற்றொரு இடியாக தனது தாயாரும் விரைவில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறியதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
Esta historia es de la edición November 14, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 14, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்எல்எ அடிக்கல்
ஆர்.கே.பேட்டை, நவ: 14: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
எரும்பியில் நடந்த ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் பங்கு எடுத்து ஆலோசனைகளை வழங்கினர்.
திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்
கட்டுமாளப் பளரிகளை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மீசரகண்டாபுரதம் - சாணுர்மல்லவரம் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
ஆர்.கே.பேட்டை, நவ.14: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம்-சாணுர் மல்லவரம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயில்களில் உண்டியல் கொள்ளை
சோழவரம் அருகே கோயிலின் உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் நிரம்பி காணப்படும் கொசஸ்தலை ஆற்று தடுப்பணைகள்
கொசஸ் தலை ஆற்றில், மழைநீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள்வதில் கால தாமதம் ஏற்படுவதை கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் 2வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் 72.95 கோடி மதிப்பில் திருமண மண்டபங்கள்
குன்றத்தூர் முருகன் கோயிலில் ₹2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டம் உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டத்தின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய பல்கலையில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.