நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்களான சைபர் குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள காவலர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நேற்று நடைபெற்றது.
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறையினர் என்றால் யார் என்று அண்ணா சொன்னதை சொல்லி, உங்களை வரவேற்க விரும்புகிறேன். தங்களால் உருவாக்கப்படாத பிரச்னைகளுக்கு, தீர்வு காண வேண்டியவர்கள்! முரண்பாடு ஏற்படும் இடங்களில், முதல் ஆளாக நிற்க வேண்டியவர்கள்! எல்லா விதங்களிலும் சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டியவர்கள்! உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன், நடந்துகொள்ள வேண்டியவர்கள்! பெற்ற சிறந்த பயிற்சிக்கு ஏற்ப கடமையுணர்ச்சி மிக்கவர்களாக, இருக்க வேண்டியவர்கள்! இப்படி இன்ப, துன்பங்களை துறந்து, ஊண், உறக்கம் மறந்து, கடமை – கண்ணியம் – கட்டுப்பாடோடு பணியாற்ற வந்திருக்கக்கூடியவர்கள் தான் காவலர்கள்.
நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக, நேர்மையாக, திறமையாக செயல்பட்டு மக்களை காப்பாற்றும், காவல்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்திருக்கிறது. அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் மறுக்கமுடியாது.
Esta historia es de la edición November 28, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 28, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
'96' திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ் - கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள்
மதுராந்தகம் மற்றும் செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் மதுவிலக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டிகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.