ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 52,500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. 2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடங்கினர். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது. வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் (26ம்தேதி) தொடங்கிய கனமழை நேற்று 2ம் நாளாக விடாமல் பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டிம் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது.
நேற்றும் மழை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கரில் ஒரு மாதமான இளம் சம்பா பயிர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. கடல் சீற்றத்தால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 லட்சம் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் தெற்கு தெருவில் 150 ஆண்டு பழமையான வீட்டின் முன்பகுதி மழையால் இடிந்து விழுந்தது.
Esta historia es de la edición November 28, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 28, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
கடந்த 2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின.
அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்
வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு
‘பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
நாங்க எல்லாருமே பவுலர்தான்யா...டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனை
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனையை அரங்கேற்றி உள்ளனர்.
நியூசியுடன் முதல் டெஸ்ட்டில் - இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு
நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன் எடுத்துள்ளது.
முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை
நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 23ம் தேதி (திங்கட்கிழமை) வரைநடக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போது, 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முழு அட்டவணை வெளியிடப்பட்டது.
நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு
ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.