சென்னையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட பிறகு நிருபர்களை சந்தித்து பேசியதாவது:
வங்கக்கடலில் உருவாகியிருந்த பெஞ்சல் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. கனமழை பெய்தாலும் நம்முடைய அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், தூர்வாரும் பணிகளின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உங்களில் பல தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றிப் பாராட்டி சொல்லியிருக்கின்றீர்கள்.
வட சென்னை பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கு ராட்சத மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சில இடங்களில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதை ரயில்வே மேம்பாலப்பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1,018 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்களுக்கு 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் அறிவித்திருந்தேன். அந்த அடிப்படையில், 386 அம்மா உணவகங்களில் 1,07,047 பேருக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
Esta historia es de la edición December 02, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 02, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மழைநீர் விரைந்து வெளியேற்றம் வியாசர்பாடி, பெரம்பூரில் போக்குவரத்து சீரானது
கன மழை காரணமாக வட சென்னையின் முக்கிய இடங்களான பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், ஓட்டேரி, கொளத்தூர், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி உள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள்
பெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
பள்ளிப்பட்டில் தெருவின் நடுவே ஆபத்தான நிலையில் மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 8ல் சாலியர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் திருவள்ளூர் அடுத்த மப்பேடு, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள டாங்வூ சர்பேஸ்டெக் நிறுவனத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே, புயல் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், வங்கிக் கடன்
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் 7 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
திருத்தணியில் 20 செ.மீ மழை பதிவு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது.
திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்
திருவாலங்காடு பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் கன மழை காரணமாக நீரில் மூழ்கியது.