திமுக எம்பிக்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை தரவில்லையென்றால் மீண்டும் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது-மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து-நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
திமுக எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள்-நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் பாஜகவினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பாஜக ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.கழகம் கவலை கொள்கிறது.
Esta historia es de la edición December 22, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 22, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
'96' திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ் - கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள்
மதுராந்தகம் மற்றும் செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் மதுவிலக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டிகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.