குறிப்பாக, கார்பன் வெளியேற்றம், காடு அழிப்பு, மக்கள் தொகை அதிகரிப்பு, பனிப்பாறை உருகுதல், கடல் நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணமாக வறட்சி, அடிக்கடி புயல்கள் உருவாகுதல், பலத்த மழை, அதிக அளவிலான பனிப்பொழிவு, புவி வெப்பமயமாதல் போன்றவை ஏற்பட்டு வருகிறது.
மேலும், இந்த பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பனி, குளிர் அதிகமாக உள்ள நேரங்களில் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வாக்கிங் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று அதிகரித்து வருவதாக, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் பத்மா சுஷ்மா கூறுகையில், ‘‘வாக்கிங் நிமோனியா என்பது மைக்கோ பிளாஸ்மா அல்லது கிளமிடியா போன்ற வித்தியாசமான உயிரினங்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று ஆகும்.
வழக்கமான நிமோனியாவை போல் இல்லாமல், வாக்கிங் நிமோனியா அதன் ஒப்பீட்டளவில் லேசான அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. எனவே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. இதில் சளி, காய்ச்சல், தொடர்ந்து இருமல் ஆகியவை இருக்கும், வறண்ட இருமலும் ஏற்படும்.
வாக்கிங் நிமோனியா உள்ள நபர்கள் பொதுவாக மிகவும் தீவிரமான சுவாச நோய் தொற்றுகளுடன் தொடர்புடைய கடுமையான சோர்வை அனுபவிப்பதில்லை என்றாலும், அவர்களுக்கு லேசான காய்ச்சலுடன் சற்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். அதன் லேசான தன்மை காரணமாக, மக்கள் பெரும்பாலும் தங்கள் வழக்கமான பணிகளை தொடர்கிறார்கள். அவ்வாறு செய்யாமல், அதன் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிப்பது முக்கியம் ஆகும்.
இந்த நோய் பாக்டீரியாவால் ஏற்படுவதால் இதற்கு பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கூடுதலாக, அறிகுறிகளை போக்க உதவும் பிற சிகிச்சைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகள் காய்ச்சலை குறைக்கலாம், மேலும் இருமல் மருந்துகள் தொடர்ந்து இருமலை குறைக்க உதவும். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் நெபுலைசேஷன் சிகிச்சையும் இதற்கு அளிக்கப்படுகிறது.
Esta historia es de la edición January 06, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 06, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்
போக்குவரத்து போலீசார் வழங்கினர்
161 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
ராகுல் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் வரை போராட்டம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்து, அப்பட்டமான ஜனநாயக அடக்குமுறையில் ஈடுபடும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்
மேற்கு வங்க அரசு மேல்முறையீடு
அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர், எம்எல்ஏ வாழ்த்து
சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய மொபைல் செயலி தொடக்கம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
வையாவூர் ஊராட்சியில் உள்ள மில் ரோடு சீரமைக்கப்படுமா?
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா துறைகள் வளர்ச்சி பெறும்
மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்
போலி மதுபானம் விற்ற 4 பேர் கைது
பாட்டில், ஸ்டிக்கர் தயாரித்தது அம்பலம்
விண்ணப்பதாரர் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய காலக்கெடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.