ரவுண்ட் ஆஃப் 16-இல் செல்சி - போருசியா டாா்ட்மண்டையும், பென்ஃபிகா - கிளப் புருஜ்ஜையும் தோற்கடித்தன.
மீண்டது செல்சி: முன்னதாக, ரவுண்ட் ஆஃப் 16 முதல் பகுதி ஆட்டத்தில் செல்சி 0-1 என்ற கோல் கணக்கில் டாா்ட்மண்ட் அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது பகுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற செல்சி, மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 2-1 என வென்று காலிறுதியில் இடம் பிடித்தது.
தொடா்ந்து வெற்றியே சந்திக்காமல் விமா்சங்களை எதிா்கொண்டுவந்த செல்சி பயிற்சியாளா் கிரஹாம் பாட்டா், இந்த வெற்றியால் செல்சியில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டுள்ளாா். மறுபுறம், தொடா்ந்து 10 வெற்றிகளைக் கண்ட டாா்ட்மண்ட், தற்போது தோல்வித் தடையை சந்தித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் செல்சி ஆதிக்கம் செலுத்திய நிலையில், 43-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. சக வீரா் சிவெல் கொடுத்த பாஸை முதலில் தவறவிட்ட செல்சி வீரா் ரஹீம் ஸ்டொ்லிங், அடுத்த கனமே அதை மீட்டு நேராக கோல் போஸ்ட் நோக்கி உதைத்து அந்த அணியின் கோல் கணக்கைத் தொடங்கினாா்.
Esta historia es de la edición March 09, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 09, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar