மக்களவையில் கடும் அமளிக்கிடையே ஒருசில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா், அவை செவ்வாய்க்கிழமைக்கு (ஆக. 1) ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலையில் கூடியதும் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘ஒட்டுமொத்த தேசமும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தேசத்துக்கு சிறந்த உதாரணத்தை நாம் பிரதிபலிக்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது முதல், அவையின் நேரத்தை நல்ல முறையில் நாம் பயன்படுத்தவில்லை. இது துரதிருஷ்டவசமானது. மணிப்பூா் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’ என்று கூறி, எதிா்க் கட்சி உறுப்பினா்களை இருக்கைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினாா்.
அதை ஏற்காத எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா். அதைத் தொடா்ந்து, அவையை முதலில் பிற்பகல் 2.30 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா். அப்போது, ‘மணிப்பூா் விவாகரத்தின் மீது விதி எண்.176-இன் கீழ், குறுகிய நேர விவாதத்துக்கு ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, விவாதத்தைத் தொடங்கலாம்’ என அவைத் தலைவா் தெரிவித்தாா்.
இதை ஏற்காத எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ‘விதி எண்.267-இன் கீழ், அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு அந்த விவகாரத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.
Esta historia es de la edición August 01, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 01, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மறு ஆய்வு அலுவலர்கள் (ஆர்ஓ) மற்றும் உதவி மறு ஆய்வு அலுவலர்களுக்கான (ஏஆர்ஓ) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்
இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
உத்தர பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறையின் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்தியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சம்பா பருவ பயிர்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை
சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ள நிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்; தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 16) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது
டொமினிகா காமன்வெல்தின் உயரிய விருதான ‘டொமினிகா மரியாதை விருதை’ பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப்பின் வெற்றியும் எதிர்பார்ப்பும்!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 20,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். அதன் முடிவு எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காணாமற்போன கிராம ‘கதாபாத்திரங்கள்’
அன்றைய மக்கள் வேளாண் தொழிலோடு இயைந்து வாழ்ந்ததால் விதைப்பு காலம் தொடங்கி அறுவடைக்காலம் முடியும் வரை பகல் நேரத்தில் காடுகளில் உழைப்பவர்களாக இருந்தனர்.
தொழில் பூங்காவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
நாகையில் தொழில் பூங்காவுக்கு செல்லூரில் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.