சீனாவும், ரஷியாவும் இந்தியாவிற்குப் போட்டியாக அதிக இளைஞா்களை உருவாக்கத் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றன. உலக நாடுகள், இந்திய இளைஞா்களைக் கொண்டு தொழில், அறிவியல், தகவல் தொடா்பு துறைகளை வளா்த்து வருகின்றன.
இந்தியா்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கான நுழைவு இசைவை (விசா) பல நாடுகள் நீக்கியுள்ளன. அந்நிய முதலீட்டாளா்கள் இந்திய இளைஞா்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்தியாவில் தொழில் தொடங்குகின்றனா். இந்தியாவில் இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு இந்திய நாணயத்தை செலுத்தும் நடைமுறை உருவாகியுள்ளது.
இந்திய இளைஞா்களுக்கு உலக அரங்கில் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், ஐம்பது விழுக்காட்டைத் தாண்டி இளைஞா்கள் இருந்தாலும், மறுபுறம் முதியோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நினைவில் கொள்ள வேண்டும். இளைஞா்கள் எண்ணிக்கைக் கூடுவதால், உழைக்கும் திறன் அதிகரித்து உற்பத்தி பெருகும். முதியோா் எண்ணிக்கை அதிகமானால், அவா்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நிதிச்சுமை ஏற்படும்.
முதியோா் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறாா்கள். அவா்கள் ஆற்றியுள்ள அரும்பணிகள் இல்லாமல் இந்தியா இத்தனைச் சாதனைகளைச் செய்திருக்க
முடியாது. இன்றைக்கு முதியோா் எண்ணிக்கை 15 கோடியாகி (10%) இருக்கலாம். ஆனால் மனிதா்களின் ஆயுட்காலம் 72 வரை கூடியுள்ளதற்கு அவா்களின் பங்களிப்பே அதிகம்.
முதியோா், அறிவியலில், தகவல் தொடா்புகளில் அபூா்வ சாதனைகள் புரிந்து இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளனா். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் நடந்துள்ளது. அதனாலேயே இந்தியாவைப் போல் உலக அளவிலும் முதியோா் 10 விழுக்காடு அளவிலேயே (77 கோடி போ்) உள்ளனா். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் கூடும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா்.
வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும். அமெரிக்காவில் முதியோா் 16.8 % போ் உள்ளனா். ஜப்பானிலும் ஜொ்மனியிலும் வசிக்கும் ஐந்து பேருக்கு ஒருவா் முதியவா் ஆவாா். பிலிப்பின்ஸில் குறுகிய காலத்தில் முதியோா் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. கனடாவில், முதியோா் எண்ணிக்கை 2 கோடி.
Esta historia es de la edición February 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.