வழக்குரைஞர் மற்றும் பேராசிரியருமான சர் வில்லியம்ஸ் ஐவர் ஜென்னிங்ஸ் (1903-1965) என்ற பிரபல அரசமைப்பு சட்ட நிபுணர், இலங்கை சர்வகலாசாலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராகப் பணியாற்றியவர். 1956-1957இல் மலேசியாவின் அரசியல் நிர்ணய சட்டத்தை உருவாக்க உதவியவர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, "இந்தியர்கள் தங்களுடைய அரசியல் நிர்ணய சட்டத்தின் மூலமாக தங்களைத் தாங்களே தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைத்துக் கொள்ளும் அடிப்படை உரிமையைத் தந்து கொண்டுள்ளார்கள்' என்று கிண்டலடித்தார். 50 ஆண்டுகளுக்கு முன் சட்டக்கல்லூரி மாணவனாக அவர் சொன்னதைப் படிக்கும்போது எனக்குக் கோபம் வந்தது. ஜென்னிங்ஸினுடைய ஆழமான அறிவும் விசாலமான பார்வையும் என்னை வியக்க வைக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி-3 இந்தியர்களுடைய அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. அதில், பிரிவு 21, எந்த குடிமகனுடைய உயிரும் தனிமனித சுதந்திரமும் சட்டப்படி அல்லாமல் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படலாகாது என உறுதி செய்கிறது. இதனுடைய உட்பொருள், உரிய சட்டத்தின்கீழ் யாரையும் சிறையில் அடைக்கலாம் என்பதுதான். இதைத்தான் ஜென்னிங்ஸ் கிண்டலடித்தார்.
நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயர்களில் பல ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி, செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. அந்த சட்டங்களில் ஒன்றுதான் "தமிழ்நாடு பயங்கர செயல்பாட்டளர்களான சாராய வணிகர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப குற்றவாளிகள், போதை பொருள் வியாபாரிகள், காடு வளம் அழிப்பவர்கள், குண்டர்கள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்தல்காரர்கள், காமக்கொடூரர்கள், குடிசை நிலங்களை அபகரிப்பவர்கள், திருட்டு விடியோ குற்றவாளிகள் தடுப்புச் சட்டம்- 1982. 1982-இல் குண்டர்கள் சட்டம் என ஆரம்பித்து ஒவ்வொரு குற்றமாக சேர்க்கப்பட்டு இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த சட்டம் செல்லமாக "குண்டர் சட்டம்' என அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
Esta historia es de la edición May 09, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 09, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கடலூருக்கு பேரிடர் மீட்பு படையினர் வருகை
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பென்ஜால்' புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கடலூருக்கு புதன்கிழமை வந்தனர்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் 3-ஆவது நாளாக மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தஞ்சாவூரில் 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 2,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உதகையில் குடியரசுத் தலைவர் முர்மு
முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளர்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்
'வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதும் ஹிந்து சமூக தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.