கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
மேலும், அவர்களது பெயரில் ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜி.கே.மணி (பாமக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வீ.நாகைமாலி (மார்க்சிஸ்ட்), நயினார் நாகேந்திரன் (பாஜக), வைத்திலிங்கம் (ஓபிஎஸ் அணி), சதன் திரு மலைக்குமார் (மதிமுக), சிந்தனைச் செல்வன் (விசிக), ராமச்சந்திரன் (இ.கம்யூ.), அப்துல் சமது (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினர்.
அவரது விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோவிந்தராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
சட்டரீதியாக நடவடிக்கை: எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருள்களை எந்தவ கையிலும் அனுமதிக்க இயலாது. அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
Esta historia es de la edición June 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி உறவினரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு, கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் பிரார்த்தனை கூட்டம்
புத்தாண்டு ஆசிர்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
நாளை ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு இஸ்ரோ தகவல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு; தென்னாப்பிரிக்க இளைஞர் கைது
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி, பெண் எஸ்.ஐ. கைது
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டதற்கான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுறுத்தல்
இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
போகி: நெகிழி எரிப்பதை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்
போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழிப் பொருள்கள் எரிப்பதை தவிர்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.