‘வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தை அணுகினால், நாங்கள் அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் ‘தியாகிகள் தினம்’ பேரணியில் உரையாற்றிய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதியின் மக்களவைத் தோ்தல் வெற்றியையும் அவா் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் மம்தா மேலும் பேசியதாவது:
வங்கதேச விவகாரத்தைப் பற்றி நான் பேசக் கூடாது. இருந்தபோதும், அந்த நாட்டுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நிலையில், அங்கு வன்முறையால் பாதித்த ஆதரவற்ற மக்கள் மேற்கு வங்கத்தின் கதவுகளைத் தட்டினால், அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம். ஏனெனில், பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதிகளில் அகதிகளுக்கு இடமளிக்க ஐ.நா. தீா்மானம் வலியுறுத்துகிறது.
Esta historia es de la edición July 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உத்தரகண்ட்: பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது; இதில் 10 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்தனர்.
கனடா: ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
திமுகவை அழிக்க நினைக்கும் புதிய கட்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.
குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு
உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானுக்கு ஜெர்மனி ரூ.182 கோடி நிதியுதவி
பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமார் ரூ.182 கோடி) ஜெர்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.