இந்தியா தீவிர கண்காணிப்பு
Dinamani Chennai|August 07, 2024
‘வங்கதேச நிலவரத்தை குறிப்பாக சிறுபான்மையினரின் நிலைமையை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது; அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம்’ என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா தீவிர கண்காணிப்பு

‘வங்கதேசத்தில் நிலவும் சிக்கலான மற்றும் மாறுதலுக்குரிய சூழலைக் கருத்தில்கொண்டு, அந்த நாட்டுடனான எல்லையில் கூடுதல் விழிப்புடன் செயல்பட பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பம் தொடா்பாக இந்தியாவின் முதல் அதிகாரபூா்வ கருத்துகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் தனது அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, லண்டனில் தஞ்சமடையும் திட்டத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தாா்.

கடந்த சில நாள்களாக வன்முறையால் பற்றியெரிந்த வங்கதேசத்தில் ஹசீனா வெளியேறிய பிறகும் பதற்றமான சூழல் நீடிக்கிறது. லண்டன் பயணத் திட்டத்தில் சில சிக்கல்கள் எழுந்ததால், இந்தியாவில் பாதுகாப்பான இடத்தில் ஹசீனா தங்கியுள்ளாா்.

மத்திய அரசு விளக்கம்: சா்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்து விளக்கமளித்தாா். அவா் கூறியதாவது:

வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்நாட்டில் சுமாா் 19,000 இந்தியா்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவா்களில் 9,000 போ் மாணவா்களாவா். இந்த மாணவா்களில் பெரும் பகுதியினா் கடந்த ஜூலையிலேயே தாயகம் திரும்பிவிட்டனா்.

இந்தியா ஆழ்ந்த கவலை: வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்திய தூதரகமும், சிட்டகாங் உள்ளிட்ட 4 நகரங்களில் துணைத் தூதரகங்களும் உள்ளன. இவற்றின் வாயிலாக இந்திய சமூகத்தினருடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம். டாக்காவில் உள்ள அந்நாட்டு அரசு அதிகாரிகளுடனும் தொடா்பில் உள்ளோம்.

இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவுகள், பல தசாப்தங்களாக பல்வேறு ஆட்சிகளின் கீழ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளன. அந்நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமின்மை, வன்முறை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

Esta historia es de la edición August 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

பாகிஸ்தானியர்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது வங்கதேசம்

பாகிஸ்தானியர்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளர்த்தியுள்ளது.

time-read
1 min  |
January 13, 2025
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
January 13, 2025
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்
Dinamani Chennai

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 13, 2025
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது
Dinamani Chennai

கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது

டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமர் பதிலடி

time-read
1 min  |
January 13, 2025
டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு
Dinamani Chennai

டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், அதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க இருக்கிறார்.

time-read
1 min  |
January 13, 2025
Dinamani Chennai

கேரளம்:காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 பாதிரியார்கள் மீது வழக்கு

எர்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆர்ச்பிஷப் வீட்டுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் 20 பாதிரியார்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

time-read
1 min  |
January 13, 2025
இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு
Dinamani Chennai

இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு

உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய இன்டர்போல் (சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த 'சில்வர்' நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அறிவிப்பு) என்ற புதிய நடைமுறை, இந்தியாவின் முன்மொழிவு என்று சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் கூறினார்.

time-read
1 min  |
January 13, 2025
மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு
Dinamani Chennai

மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு

மகாராஷ்டிரத்தின் கட்ச் ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

time-read
1 min  |
January 13, 2025
'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை
Dinamani Chennai

'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை

தனித்துப் போட்டியிடுவது குறித்து சிவசேனை (தாக்கரே) விளக்கம்

time-read
1 min  |
January 13, 2025
Dinamani Chennai

திரிணமூல் காங்கிரஸ்: கேரள ஒருங்கிணைப்பாளராக பி.வி.அன்வர் பொறுப்பேற்பு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேரள ஒருங்கிணைப்பாளராக எம்எல்ஏ பி.வி.அன்வர் பொறுப்பேற்றுள்ளார்.

time-read
1 min  |
January 13, 2025