எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் திங்கள்கிழமை (ஆக.19) வெளியிட்டாா்.
நீட் தோ்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் பள்ளி மாணவா் பி.ரஜனீஷ், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்ததால் அவரே தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளாா்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 22 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
தரவரிசைப் பட்டியல்: இந்த இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதிமுதல் கடந்த 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் மொத்தம் 43,063 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா்.
Esta historia es de la edición August 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.