பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
மேலும், மலேசியாவில் இந்திய தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதைக் ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை இரவு வந்தார். பிரதமராக அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
இருதரப்பு வியூக கூட்டாண்மை: பின்னர், செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியா-மலேசியா இடையிலான கூட்டுறவை 'விரிவான வியூக கூட்டாண்மை' அந்தஸ்துக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
இரு நாடுகளின் பொருளாதாரத் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, இருதரப்பு வர்த்தகம் சொந்த கரன்சியில் (இந்தியா-ரூபாய், மலேசியா-ரிங்கிட்) மேற்கொள்ளப்படுகிறது.
Esta historia es de la edición August 21, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 21, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில், அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரியில் கண்ணாடிக் கூண்டு பாலப் பணி: அடுத்த ஆண்டு முடிக்க இலக்கு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திநாதருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிள் ரகங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் மீண்டெழுந்த உற்பத்தித் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆசியாவின் அமைதிக்கு புத்த மதத்தின் பங்களிப்பு
விரிவாக விவாதிக்க குடியரசுத் தலைவர் அழைப்பு