மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய பாந்தாஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே களமிறங்க முடிவு செய்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 2-ஆவது, 3-ஆவது கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. அக்டோபர் 4-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் கடைசியாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) முதல் முறையாக இணைந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக இருந்த பிடிபி தலைவர் முஃப்தி முகமது சையத் 2016-இல் காலமானதையடுத்து, அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதல்வரானார். 2018-இல் ஆதரவை பாஜக திரும்பப் பெற்றால், ஆட்சிக் கவிழ்ந்து ஆளுநர் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வந்தது.
Esta historia es de la edición August 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகர இழப்பு அதிகரிப்பு ஏன்?: இந்தியா சிமென்ட்ஸ்
சிமென்ட் விலை குறைந்ததன் காரணமாக நிகர இழப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்,நவ. 8: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகர்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தீரம் மிக்கவர் டிரம்ப்: புதின் புகழாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீரம் மிக்கவர் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
16 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பைடனின் திட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன் நவ. 8: உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் அதிபர் ஜே பைடனின் திட்டத்தை டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.