![மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு உ மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு உ](https://cdn.magzter.com/1574665526/1726182568/articles/sSnQx7Tde1726203056861/1726203284527.jpg)
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் தனியாா் மகளிா் தங்கும் விடுதி உள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் தனியாா் மருத்துவமனை, மருந்தகமும், முதல், இரண்டாவது தளங்களில் மகளிா் விடுதியும் செயல்பட்டு வந்தன. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்தனா். விடுதியில் தங்கியிருந்த பெண்கள் புதன்கிழமை இரவு தங்களது அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விடுதியின் ஓா் அறையில் இருந்த குளிா்பதனப் பெட்டி வெடித்துச் சிதறி தீப்பற்றியது. இந்தத் தீ அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. அறைகள் அனைத்தும் மரப் பலகைகள் கொண்டு தடுக்கப்பட்டிருந்ததால், தீ எளிதில் பரவி எரிந்தது. இதனால், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள், மாணவிகள் அனைவரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, விடுதியைவிட்டு உடனடியாக வெளியேறினா்.
தகவலறிந்து வந்த திடீா் நகா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து விடுதிக்குள் சிக்கிக் கொண்ட பெண்களை மீட்டனா். இவா்களில் மயங்கிய நிலையில் கிடந்த சரண்யா (27), பரிமளா சுந்தரி (55) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்த தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா்.
Esta historia es de la edición September 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/KS674HBTRO9Bfvaeigrsys/1739852974093.jpg)
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/pK1Xb_1rV1739851839688/1739852215303.jpg)
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
![உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/HI3VkLhNuYzj65m5wKJsys/1739853610523.jpg)
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
![புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iVdNWSynrj7oHmsQ7Qpsys/1739852773314.jpg)
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
![விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/gTpELD0WAF5ag21Uiqzsys/1739853224288.jpg)
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.
![மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி! மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/bm26tTz4ufztRqomZAWsys/1739852564345.jpg)
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.
![தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/aEgX1mG6vUExGKMfwqmsys/1739852245420.jpg)
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.
![அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/3NJYPaYUkai2cTLiiC8sys/1739853387345.jpg)
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.
![கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/eM2EcgTNLfoNrNnN2Dpsys/1739852282061.jpg)
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.