அதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னை திரும்பினார்: 17 நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் முதல்வர் சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
எனது அமெரிக்க பயணத்தின் போது, அங்குள்ள தலைசிறந்த 25 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளேன். இந்தச் சந்திப்புகளின் போது, 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இதன் மூலம், ரூ.7 ஆயிரத்து 616 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
கூகுளுடன் ஒப்பந்தம்: கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கும், வணிகம் புரிவதற்கும் உகந்த சூழல் நிலவுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு நிறுவன செயல்: அமெரிக்க பயணத்துக்கு மகுடம் வைத்தது போல, எங்கள் வேண்டுகோளை ஏற்று, சென்னை மறைமலைநகரில் உள்ள ஆலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க ஃபோர்டு நிறுவனம் முன்வந்துள்ளது. முதலில் பேச்சுவார்த்தை நடத்திய போது, நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் பேசி விட்டு அதற்குப் பிறகு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர்.
Esta historia es de la edición September 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.