எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.
மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அநுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா்.
இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது.
தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சாா்பில், ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) கட்சித் தலைவா் அநுர குமார திசாநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
தோ்தலில் 1,71,40,354 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். 13,400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 22 தோ்தல் மாவட்டங்களில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
தோ்தலை உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சோ்ந்த சுமாா் 8,000 தோ்தல் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா். வெளிநாட்டுப் பாா்வையாளா்களில், ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் நாடுகள், தெற்காசிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் இடம்பெற்றனா்.
தோ்தலில் மொத்தம் 75 சதவீதம் போ் வாக்களித்தனா். அதிகபட்சமாக, நுவரெலியா, கம்பஹா மாவட்டங்களில் தலா 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில், 83 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தற்போதைய தோ்தலில் வாக்குப் பதிவு 75 சதவீதமாக சரிந்தது.
Esta historia es de la edición September 23, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 23, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.