அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
Dinamani Chennai|September 23, 2024
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி

இதையடுத்து, 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்ஸில் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட மண்ணின் மைந்தனான ரவிச்சந்திரன் அஸ்வின், 2-ஆவது இன்னிங்ஸில் அட்டகாசமாக 6 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியா வெற்றிக்கு வழிவகுத்தார். 113 ரன்கள் விளாசி, 6 விக்கெட் டுகளும் சாய்த்து சென்னையை தனது கோட்டையாக மீண்டும் நிரூபித்த அவர் ஆட்டநாயகன் ஆனார்.

சென்னையில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தயார் ஆனது. முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 144 ரன்களுக்கே விக்கெட் டுகளை இழந்து தடுமாறியது. பிரதான பேட்டர்கள் சோபிக்காமல் போன நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பௌலிங் ஆல்ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி, அணியை ருந்து மீட்டது.

அவர்கள் பங்களிப்புடன் 376 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இந்தியா. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட இந்திய பௌலர்களின் வேகத்தில் விக்கித்து 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 'ஃபாலோ-ஆன்' வாய்ப்பை வழங்காமல், 2-ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இந்த முறை ஷுப்மன் கில் - ரிஷப் பந்த் பார்ட்னர்ஷிப், அணியின் ஸ்கோரை வலுப்படுத்த, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது இந்தியா.

Esta historia es de la edición September 23, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 23, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.