தமிழக அரசியல் உலகைப் பொருத்தவரை, திரைத் துறையில் இருந்து அரசியலில் களமிறங்கியவர்களின் பட்டியல் தொடர்ந்து நீள்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜய டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், ராமராஜன், சரத்குமார், விஜயகாந்த், சீமான், கமல்ஹாசன், கார்த்திக், குஷ்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரிசையில் விஜய் இணைந்துள்ளார். இவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்தவாறு தங்களை பொதுவாழ்வில் அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.
எம்ஜிஆரை பொருத்தவரை 1957, 1962, 1967, 1971ஆகிய தேர்தல்களில் திமுகவுக்காக சுழன்று பணியாற்றியவர். நடிகராக இருந்த எம்ஜிஆர், திமுகவின் சட்டமேலவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், சிறுசேமிப்புக் குழு துணைத் தலைவர், திமுக பொருளாளர் என 20 ஆண்டுகள் திமுகவில் பயணம் செய்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுகவை தொடங்கி ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தவர்.
அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலர், மாநிலங்களவை உறுப்பினர், சத்துணவுத் திட்ட உறுப்பினர் என ஜெயலலிதாவும் அதிமுகவில் வலம்வந்து எம்ஜிஆருக்கு பின்னர் அவரது பிம்பத்தைப் பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் பிடித்து கோலோச்சியவர். எனவே, எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நடிகர் விஜயை ஒப்பிட முடியாது. விஜயகாந்த், கமலுடன் வேண்டுமானால் விஜயை ஒப்பிடலாம்.
விஜயகாந்தை பொருத்தவரை எந்தக் கட்சியிலும் அவர் உறுப்பினராக இருந்தது இல்லை. எம்ஜிஆர் ரசிகர், கருணாநிதி, ஜி.கே.மூப்பனாரின் அனுதாபி என்ற பிம்பத்தைக் கொண்டவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து சாதித்த விஜயகாந்துக்கு, தமிழகம் முழுவதும் கட்டமைப்பு கொண்ட ரசிகர் மன்றமும் இருந்தது.
Esta historia es de la edición September 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்
விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை
வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்கப்படுகிறது.
மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரி ஊரகப் பகுதியில் ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் 17 வீடுகளும், 1,500 ஏக்கர் நெற்பயிர்களும் சேதமடைந்தன.
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு
ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமார் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபர் விளாதிமீர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.