மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் (86) உடல், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (அக்.10) தகனம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவருக்கு உணர்வுபூர்வமாக இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முதுமை தொடர்பான பல்வேறு உடல்நல பாதிப்புகளால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, புதன்கிழமை (அக்.9) காலமானார். அவரது உடல், மும்பையில் உள்ள தேசிய கலை மையத் தில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டது.
இந்தியாவில் பெருமதிப்பை பெற்றவரும், சர்வதேச அளவில் அங்கீக ரிக்கப்பட்ட தொழில்துறை தலைவருமான ரத்தன் டாடாவுக்கு அரசுப் பதவி வகிப்போர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், டாடாவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், நிறுவன உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Esta historia es de la edición October 11, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 11, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.
திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை
திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.
அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு - இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன்
ராம்பரம், ஜன. 19: அனைத்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் கணித அறிவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் கூறினார்.
சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு
சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.