நான் 1948 முதல் 1952 வரை கோவில்பட்டி வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள், காந்தி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவியது. அடுத்த நாள் மாலையில் பள்ளியின் பெரிய அரங்கில் ஒரு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பிரார்த்தனைப் பாடலுக்குப் பின்பு மாவட்ட நீதிபதி நெஞ்சுருக்கப் பேசினார். அது சமயம் என் அருகில் நின்றிருந்த தமிழ் ஆசிரியர், சீனா சானா (சி.ச.) என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் சி.சங்கரலிங்கம் செட்டியார் நான் கண்கலங்கி அழுது கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்!
அவர் என் அருகில் வந்து "பிச்சை! ஏன் அழுகிறாய்? மகாத்மா மறைந்துவிட்டார் என்பதற்காகவா?" எனக் கேட்டார். "இல்லை" என்றேன் நான்!
"பின் எதற்காக அழுகிறாய்?" என வினவினார்.
"நான் மகாத்மாவை இன்று வரை பார்க்கவில்லையே! இனியும் அவரைப் பார்க்க முடியாதே! அதை நினைத்துத்தான் அழுகிறேன்" என்றேன்.
அரசு அதிகாரம் எதுவும் இல்லாமலே, மக்களின் மனத்தில் என்றும் அழியா இடம் பிடித்தவர் அண்ணல் காந்தி அடிகள் மட்டுமே! சத்தியம், அகிம்சை ஆகிய வழிகளை நவீன அரசியலிலும் கடைப்பிடிக்கலாம் என்று போதித்தவர். அதன்படியே வாழ்ந்து காட்டியவர் காந்தி. அவருடைய வாழ்க்கையே ஒரு உபதேசம்.
மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன வசதிகள் அதிகம் பரவாத காலத்தில், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். போரில்லா உலகத்தை உருவாக்கப் பாடுபட்டார். 'மகாத்மா' என்று உலக மக்களால் நேசிக்கப்பட்டார். ஆனால் அவரோ தன்னை 'ஒரு சாதாரண மனிதன்' என்றே சொன்னார். ஒரு முன்மாதிரி மனிதனாக வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதர் அவர்.
Esta historia es de la edición November 09, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 09, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டுகள் சிறை - மனைவிக்கு 7 ஆண்டுகள்
அல்-காதிர் அறக் கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கர்நாடக ஏ.டி.எம். பணம் கொள்ளை சம்பவம் பாதுகாவலரை சுட்டுக் கொன்றவர் அடையாளம் தெரிந்தது
ஹைதராபாத், இந்தூர் விரைந்தது தனிப்படை
அடிச் சட்டங்களே ஆடுகின்றனவே!
இப்போது கற்பழிப்பு சராசரி நடைமுறையாகி விட்டதால் எழுந்திருக்கிற கூச்சலில் நம்முடைய சட்டப்பேரவை கற்பழிப்புக்கு மரணதண்டனை விதித்து, புதிய சட்டம் இயற்றுகிறது. கற்பழிப்புக்கு மரணதண்டனை என்றாலும், குற்றவாளியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துகிற அதிகாரம் அரசிடம்தானே இருக்கிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி
இந்தியா - ரஷியா நட்பு வளர்ச்சியை நோக்கி செல்லும் - சிவதாணு பிள்ளை
இந்தியா-ரஷியா இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உறவு மிகவும் முக்கியமானது.
ஸ்வெரெவ், அல்கராஸ், ஜோகோவிச் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.
சமாதான பேச்சின்போது இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸார் கண்முன் சம்பவம்; சடலத்துடன் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே வழக்கு தொடர்பாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போலீஸாரால் வயலுக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
பொங்கலுக்காக இயக்கப்பட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னை சங்கமம் நிறைவு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த முதல்வர்
சென்னையில் 4 நாள்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன.
காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
15 மாத தாக்குதல் முடிவுக்கு வருகிறது