தேர்தல் கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல. பொது எதிரியை வீழ்த்துவதற்குப் பல்வேறு கொள்கைகளை உடைய கட்சியினர் ஒன்றிணைவது தான் தேர்தல் கூட்டணி. அனைத்து கட்சிகளுக்கும் ஒரு கொள்கை உண்டு. தேர்தல் நேரத்தில் மட்டும் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டணி வைத்துக் கொள்கின்றனர்.
ஆகவேதான், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. அதேசமயத்தில் ஆட்சி அதிகாரம் என்பது கொள்கையைவிட முக்கியம் என்று எல்லா கட்சிகளும் கருதுகின்றன. தமிழக அரசியல் வரலாற்றில் 1967-இல் ராஜாஜியும், அண்ணாவும் ஒன்றிணைந்தார்கள். அது ஒரு மிகப் பெரிய திருப்பத்தை அந்தத் தேர்தலில் ஏற்படுத்தியது. ஆட்சியைப் பிடிப்பதற்குப் புதிய உத்தியைத் தமிழகம் அப்போது கண்டறிந்தது.
அதன்பின்னர், காலமெல்லாம் எதிர்த்தவர்களுடன் கைகோத்துக் கொண்டு பல்வேறு கட்சியினர் பல்வேறு தேர்தல் களமாடியிருக்கிறார்கள்.
காங்கிரஸை வீழ்த்திய திமுக, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைக் கடுமையாக எதிர்த்தது. 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று திமுகவும் காங்கிரஸும் 1980-இல் கூட்டணி வைத்துக் கொண்டன. எதிரெதிர் துருவங்கள் எப்படி ஒரே அணியில் இணைய முடியும் என்ற விவாதப் பொருளுக்கு தேர்தல் அரசியலில் இவையெல்லாம் சாத்தியம் என்று ஒரு புதிய வியாக்கியானம் தரப்பட்டது.
திமுகவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து, மிசாவில் கைது செய்த இந்திரா காந்தியுடன் எவ்வாறு திமுக கூட்டணி வைத்துக் கொண்டதோ, அதைப்போல மதவாத சக்தி என்று இப்போது சொல்கிற பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டதும், அவர்களோடு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்ததும் கடந்த கால வரலாறுகள்.
திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சி தொடங்கிய வைகோ இன்று திமுகவை ஆதரிப்பதிலும், அதே வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்துவதிலும் கொள்கை நிற பேதங்களைப் பார்க்கலாம்.
“கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி, பதவி என்பது மேலே அணியும் துண்டு. பதவிக்காக இடுப்பில் கட்டிய வேட்டியை நாம் இழக்கக் கூடாது” என்று சொன்னார் அண்ணா. இன்று தேர்தல் கால அரசியலில் அது மறந்துவிட்டது.
Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
வதந்தியும் உண்மையும்!
எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.