மதுரை மாநகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பீ.பி.குளம் கண்மாயையொட்டி, முல்லைநகர் பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்கான இடங்கள் குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு, அதில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பீ.பி. குளம் கண்மாயில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை மறுசீராய்வு செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்ட முடியாது எனத் தெரிவித்தது. அங்கு குடியிருப்பவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவதற்கு உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்று, அதனடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தப் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், அவர்களது மனுக்களைப் பரிசீலனை செய்யாமலும் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என அனைத்து வீடுகளிலும் பொதுப்பணித்துறை சார்பில் குறிப்பாணை (நோட்டீஸ்) ஒட்டப்பட்டது.
Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
வதந்தியும் உண்மையும்!
எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.