மாஸ்கோ, நவ. 19: தொலைதூர பகுதிகளில்தாக்குதல் நடத்தும் 6 அமெரிக்க தயாரிப்பு 'அட்டாக்கம்ஸ்' பலிஸ்டிக் ஏவுகணைகளை, ரஷியாவை நோக்கி உக்ரைன் ஏவியது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து அணு ஆயுத தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதற்கான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டார்.
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா என 32 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காப்பதே தனது நோக்கம் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளின் ராணுவ அமைப்பான நேட்டோ, கிழக்கு லகை நோக்கி விஸ்தரித்து வருவதைக் காட்டி, இந்தப் படையெடுப்பை ரஷியா மேற்கொண்டது.
நேட்டோவுக்கு ரஷியா எதிர்ப்பு: நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அதன்மூலம் அந்த அமைப்பில் உள்ள படைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் தமது எல்லைக்கு அருகிலிருந்து விரைவாக தம் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், இதனால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் ரஷியா கருதுகிறது.
இதுவே நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பிரதான காரணம். அதேவேளையில், ரஷியாவின் எல்லைகளையொட்டி 8 படைக் குழுக்களை அமைத்து தமது ராணுவ பலத்தை நேட்டோ அமைப்பு வலுப்படுத்தியுள்ளது.
Esta historia es de la edición November 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).
மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்
ஆவடி, நவ. 19: ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!
ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சோகம்
இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு
பெர்த், நவ. 19: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், வரும் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்க இருக்கிறது.