அம்மா என்னும் இணையற்ற உன்னதம்!
Dinamani Chennai|November 30, 2024
லகில் ஈடு இணையற்ற உன்னதம் என்று ஒன்று இருக்க முடியுமானால் அது தாய்மையாகத்தான் இருக்கும்.
கட்டுரையாளர்: துணை வேந்தர், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

ஒரு பொருளை ஒரு சில நிமிஷங்கள் பிடித்துக் கொண்டிருக்கச் சொன்னால், ஐந்து நிமிஷங்களில் சலித்துப்போய் கீழே வைத்துவிடுகிறோம். ஆனால் பத்து மாதங்கள் இரவு, பகல் என்று பாராமல் வயிற்றில் சுமந்து, பிறந்த குழந்தைக்குத் தனது ரத்தத்தைப் பாலாக்கி வழங்கி, வளர்த்து, அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பொறுமையாகக் கண்காணித்து வளர்க்கும் அந்த அம்மாவுக்கு ஈடு இணை தான் ஏது?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஆரம்பப் பள்ளியில் கற்றுத்தந்த பாடத்தின் பொருளை முழுமையாக நாம் புரிந்து கொள்வது அவர்களது இழப்பில் தான் என்பதை இப்போது, எனது அன்னை யின் இழப்பில் அனுபவபூர்வமாக உணர்கிறேன். அம்மாவிடம் கேட்டால் சொல்லி இருப்பாள், அப்பாவாக நான்தானே இருக்கிறேன் என்று!

எட்டு நாள் குழந்தையாக இருக்கும் போதே தாயின் இழப்பு; மெட்ராஸ் மாநகரத்தில், பெரிய கூட்டுக்குடும்பத்தில் உறவினர்களுடன் சேர்ந்த வளர்ப்பு; இளம் வங்கியாளர் ஒருவருடன் திருமணம்; கும்பகோணத்தில், சுவாமிமலைக்கு அருகில் உள்ள கொட்டை யூர் கிராமத்தில், சாதாரண கூட்டுக் குடும்பம் ஒன்றில் திருமண வாழ்க்கை; மூன்று குழந்தைகளை சராசரி குடும்பத்தில் வளர்த்த பாங்கு; இத்தனைக்கும் நடுவில், மொத்த குடும்பமும் சென்னைக்கு இடம்பெயர, அதனை அமைதியாகக் கையாண்ட நேர்த்தி - இத்தனையும் இயல்பாகக் கடந்து செல்வது என்பதை எனது தாயின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது.

தனது வங்கிப் பணியைக் கைவிட்ட கணவர், பொறியியல் கல்லூரியைத் தொடங்கி நடத்தத் தலைப்பட்ட நிலையில், எதிர்காலப் பாதுகாப்புக்கான நிச்சயம் இல்லாத போதும், துணை நின்று நம்பிக்கை ஊட்டிய லாகவம்; குடும்பத்தின் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ள, தன்னுடைய நகைகளை விருப்பத்துடன் அவருக்கு அளித்த பக்குவம்; மாமனார் - மாமியாரையும் பாசத்துடன் பராமரித்த பண்பு - இவ்வளவுக்கும் இடையில், குழந்தைகளின் ஆசைகளையும், யதார்த்தமான வீட்டு நிலைமைகளையும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் சமநிலைப்படுத்திய அவரது குணநலன்களைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது.

Esta historia es de la edición November 30, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 30, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சு கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

time-read
1 min  |
February 28, 2025
எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா

சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

216 தொழிற்பழகுநர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை

மின்வாரியம்

time-read
1 min  |
February 28, 2025
தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக
Dinamani Chennai

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 28, 2025
டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
Dinamani Chennai

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

ஊரகத் திறனாய்வுத் தேர்வு விடைக்குறிப்பு: மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

time-read
1 min  |
February 28, 2025
தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
Dinamani Chennai

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

தமிழகத்தில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்

தமிழ்நாட்டில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று மத்திய ரயில்வே மற்றும் நீர் வளத் துறை இணை அமைச்சர் வி. சோமண்ணா கூறினார்.

time-read
1 min  |
February 28, 2025
விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
Dinamani Chennai

விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 பேர் கைது

மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 28, 2025