பலத்த மழையால், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) மாலை சுமார் 5 மணிக்கு மகா தீபம் ஏற்றக்கூடிய மலையையொட்டியுள்ள வ.உ.சி. நகர், 11-ஆவது தெருவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மலையின் மேற்பகுதியில் இருந்த 2 வீடுகள் மீது பாறாங்கற்கள் விழுந்து அமுக்கியதால் வீடுகளில் இருந்தவர்களால் தப்பி ஓட முடியவில்லை. இந்த வீடுகளில் 7 பேர் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவி கமாண்டர் ஸ்ரீதர் தலைமையில் 35 பேர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ படை, மாநில மீட்புப் படை, மாவட்ட ஆயுதப் படை காவலர்கள், தீயணைப்புத் துறை வீரர்கள் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் திங்கள்கிழமை மாலை 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இறுதியாக, ரம்யா என்ற சிறுமியைத் தேடும் பணி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 5.15 மணிக்கு அவர் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, 48 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்ற மீட்புப் பணியின் இறுதியில் 7 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
Esta historia es de la edición December 04, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 04, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ
புது தில்லி, டிச. 2: செயல்படாமல் முடங்கியுள்ள நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது.
ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்
புது தில்லி, டிச. 2: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, 20 பேருடன் அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வென்றார் வெர்ஸ்டாபென்
லுசாயில், டிச. 2: எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தார் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நீட்டிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.12-இல் தொடக்கம்
சென்னை, டிச.2: 22-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அரசமைப்பு சட்டம் மீது விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்
அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம்
விழுப்புரம், டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் திங்கள்கிழமை வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
வலுவிழந்த ஃபென்ஜால் புயல்: இன்று அரபிக் கடலை அடையும்
சென்னை, டிச.2: தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நகர்ந்து கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு இடைப்பட்ட அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின
தருமபுரி, டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ரயில்வே பாலங்கள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 981.9 மி.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு
மும்பை, டிச. 2: கடந்த நவம்பர் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 14,137-ஆக அதிகரித்துள்ளது.