மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக, தில்லியில் பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது:
பிரதமர் மோடி, அதிபர் அநுரகுமார இடையிலான சந்திப்பில் ஆழமான கலாசார மற்றும் நாகரிக பிணைப்பு, புவியியல் நெருக்கம், இரு நாட்டு மக்கள் உறவு ஆகியவற்றால் இந்தியா-இலங்கை உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் மோடியிடம் அதிபர் அநுரகுமார நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் வளமான எதிர்காலம், மிகப் பெரிய வாய்ப்புகள் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று அதிபர் அநுரகுமாரவிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மலையகத் தமிழர்களுக்கான திட்டங்களுக்கு ஆதரவு: இலங்கையில் மலையகத் தமிழர்கள், கிழக்கு மாகாணத்துக்கான திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் மாகாணத் தேர்தல்களை நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
Esta historia es de la edición December 17, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 17, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.