மல்லார் - நாத லயத்தின் வழியே ஒரு வாசமாலை!
Dinamani Chennai|January 06, 2025
நாகேஸ்வரன் கோயில் குழந்திதியிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே முப்பது ஆண்டு வரை வாழ்ந்தவன் நான்.
ரவிசுப்பிரமணியன்

கோயில் என்பது வெறும் மூலஸ்தான விக்ரஹத்தை வணங்கி வழிபடும் ஓர் இடம் மட்டுமல்ல; இசை, கதை சொல்லும் கதாகாலட்சேபம், பிரவசனம், தமிழ்க் கல்வெட்டுகள், நாட்டியம், ஓவியம், சிற்பம், ஆடு, மாடு, பாம்பு, பறவைகள் போன்ற உயிரினங்கள் - நந்தவனம், ஸ்தல விருட்சம், மூலிகைகள், கேணிகள், குளங்கள், பூஜை சின்னங்களின் வகைகள், தீப தூப வகைகள், பூ வாசனாதி திரவிய ஆடை அலங்கார வகைகள், பாத்திர சமையல் வகைகள், வான சாஸ்திரம், கட்டடக்கலை, ஸப்த தான படிக்கட்டு, இசைத் தூண்கள் என இப்படி இன்னும் நூறு நூறு கலாசார சம்பத்துகள் நிறைந்த ஒரு புனித இடம்.

கோயில் சார்ந்த ஊர்களில் திருவிழா என்பது வெறும் கோயிலுக்கான நிகழ்வு மட்டுமல்ல; உறவுகளின் நட்புகளின் பிணைப்பு, அடுத்த சந்ததிக்குச் சொல்லும் கலாசார சேதி, வேறு கலாசாரம் சார்ந்தவர்களுக்கான கலைகளின் அறிமுகம். இப்படி பல அம்சங்கள் உள்ளன.

இப்படியான திருவிழா நடக்கும் பத்து நாள்களின் விசேஷங்களிலும் நாகஸ்வர வாசிப்பைக் கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இருந்தது. பக்தர்களும் பக்தரல்லாதவரும் அதை ஆசை ஆசையாய் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். பலவித காரணங்களால் கோயில்களின் விசேஷங்கள் குறையும்போது, வாசிப்பும் குறைந்து விட்டது.

பல கோயில்களில் சம்பிரதாய நடைமுறைகள் என்பது எழுதப்படாத சட்ட விதிகளால் திருத்தப்பட்டு பல விடுபடல்கள் அமலுக்கு வந்துவிட்டன. கோயில்கள் குறைந்தாலும், கோயில்களில் வாசிப்பது குறைந்தாலும் நாகஸ்வரம் என்னும் இசைக்கருவி இல்லாமல் போய்விடாது. ஏனெனில், அந்த மங்கல சங்கீதம் தமிழர்களின் மரபணுவில் கலந்த ஒன்று.

தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைக் கலை அடையாள இசைக்கருவிகளில் ஒன்றான நாகஸ்வரம், கோயில்களிலும் மட்டுமல்லாமல் பெரும்பாலும் நம் வாழ்வின் எல்லா விதமான மங்கலச் செயல்பாடுகளிலும் பின்னிப் பிணைந்த ஒன்று. பல விசேஷங்களுக்கு மங்கல இசை பயன்படுத்தப்படுவதால்தான் இன்னும் அது தன் ஜீவனைப் பிடித்துக்கொண்டு வாழ்கிறது.

Esta historia es de la edición January 06, 2025 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición January 06, 2025 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
Dinamani Chennai

யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு

தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
Dinamani Chennai

பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2025
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
Dinamani Chennai

வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
Dinamani Chennai

ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்

ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 09, 2025
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
Dinamani Chennai

குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
January 09, 2025
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
Dinamani Chennai

டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?

time-read
1 min  |
January 09, 2025
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
Dinamani Chennai

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2025
வதந்தியும் உண்மையும்!
Dinamani Chennai

வதந்தியும் உண்மையும்!

எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று

time-read
1 min  |
January 09, 2025
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
Dinamani Chennai

காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
January 09, 2025