அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் இரண்டு முக்கிய நிறுவனங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் உள்ளன. அடுத்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை படித்த இளைஞர்களின் அரசுப் பணி எனும் கனவை இந்தத் தேர்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏறத்தாழ 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், இந்தத் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுக்காக தொடர்ச்சியாகத் தயாராகி வருகின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டு நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2015-ஆம் ஆண்டில் இறுதித் தேர்ச்சிப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதே கடைசி நியமனமாக உள்ளது.
மீண்டும் சுமார் 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பல்வேறு நிலைகளைக் கடந்த பிறகு, 2021-ஆம் ஆண்டு நவம்பரில் இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் சான்றிதழ்கள், நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் முந்தைய தேர்வு முறையுடன் கூடுதலாக போட்டித் தேர்வாக நடத்தும் வகையில் தேர்வு முறையை வாரியம் மாற்றி அமைத்தது.
இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே. எனினும், இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 2024-இல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் தேர்வை ஒத்திவைப்பதாக வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் தேர்வர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
ஆகவே, கடந்த 2012-க்குப் பிறகு உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் அறிவிப்புகள் முழுமை அடையவில்லை. இதற்கு தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள தொய்வுதான் காரணம்.
Esta historia es de la edición January 10, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 10, 2025 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.