தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் சந்திக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போடவில்லை. அவதூறு பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் சந்தித்ததுபோலவும், அதிக விலை கொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை கட்டுக்கதைகள்போல் வெளியிட்டு தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அதானியை சந்தித்ததாகவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலை நிமிரவைத்துள்ளவரே எங்கள் முதலமைச்சர். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், இப்படி அடிப்படையிலே உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பு அல்ல.
"ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். தவறும்பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும்" என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
Esta historia es de la edición December 06, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 06, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நடிகர் ரஜினிக்கு 74-ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி கமல், விஜய் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
15 வருட காதலரை மணந்தார்: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்! கோவாவில் இன்று காலை நடந்தது!!
நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டனி ஆகியோரது திருமணம் இன்று காலை கோவாவில் இந்து முறைப் படி நடந்தது.
சவுதி அரேபியாவில் 2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும்!பிபா அறிவிப்பு வெளியிட்டது!!
2030 மற்றும் 2034-ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை பிபா இன்று வெளியிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி: சசிகலாவுக்கு எதிரான வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்!
குற்றவியல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
நாளை மகா தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 10,000 சிறப்பு பேருந்துகள்!
கூ கூடுதல் ரெயில்களும் இயக்கப்படுகின்றன!!
சென்னையில் கனமழை: 15 விமானங்கள் தாமதம்!பயணிகள் கடும் அவதி!!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.
அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது!
40 பேர் குழுவினர் சுமந்து சென்றனர்!!
தமிழ்நாட்டில் கன மழைக்கு சிறுவன், ஐயப்ப பக்தர் உள்பட 4 பேர் சாவு
அதில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!
காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இரவுமுதல் தொடர்ச்சியாக கொட்டும் கனமழை!
தாழ்வானப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது; 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன!!
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பியது!
எந்த நேரமும் திறந்து விடப்படும் என்பதால் வெள்ள அபாயம்!!