மாணவி பலாத்கார வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் சிறப்புச் செய்யப்படும்; நீதிமன்றம் அமைத்து குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்; இந்த வழக்கில் வேறு யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்போம்; பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபையில் பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்க அ.தி.மு.க. சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது: இங்கே கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய ஈர்ப்புத் தீர்மானத்தில் பல்கலைக்கழகத்தினுடைய பெயரைச் சொல்லி நீங்கள் எல்லாம் பேசியிருக்கிறீர்கள். ஆனால், நான் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் பெயருக்கு ஒரு கலங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
ஏனென்றால், எங்களை எல்லாம் ஆளாக்கியவர் அவர். அந்த உணர்வோடு, அந்தப் பெயரைத் தவிர்த்து, இங்கே பதிலளிக்க விரும்புகிறேன்.
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து உண்மையான அக்கறையோடு உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காகவும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கின்றார்கள். சிலர் அல்ல; ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
Esta historia es de la edición January 08, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 08, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வயிற்றின் மேல் அமர்ந்து கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்!
வயிற்றிலிருந்து குழந்தை வெளியேறியது!!
மொழிப் போர் தியாகிகள் தினம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நாளை வீரவணக்க பொதுக் கூட்டம்!
பல்லாவரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்; | மதுரவாயலில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்!!
வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யாவிட்டால் அதிக வரி!
அதிபர் டிரம்ப் அதிரடி!!
விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு,
சீமான் கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்த விழாவில் பேச்சு!!
உக்ரைன் போர் விவகாரம்: உ ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச டிரம்ப் முடிவு!
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கியது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 22-ல் அமெரிக்கா வெளியேறுகிறது!
ஐக்கிய நாடுகள் சபை தகவல்!!
தேசிய பெண் குழந்தைகள் தினம்: டி.டி.வி. தினகரன் அறிக்கை!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொலிவேற்றம் செய்யப்பட்ட தாளமுத்து நடராசன் நினைவிடம் நாளை திறந்து வைப்பு!
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!!
பிறப்பு சார்ந்த குடியுரிமை ரத்து டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
அரசமைப்புக்கு புறம்பானது என கருத்து!!
எங்கள் கட்சியினரை தி.மு.க.வுக்கு நானே அனுப்பி வைக்கிறேன்!
இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்: