அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் சனிக்கிழமையும் (10) ஞாயிற்றுக்கிழமையும் (11) இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் குழுக்களை ஸ்தாபிப்பதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஜனாதிபதிக்கு ஆதரவான அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டமைப்பில் உள்ளடங்குகின்றது.
வீடு வீடாகச் செல்லுதல், வாக்கெடுப்பு நிலையங்களில் முகவர்களை நியமித்தல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களை ஒழுங்கமைத்தல், சம்பந்தப்பட்ட தொகுதி மட்டத்தில் ஒழுங்கமைத்தல் மற்றும் வழிநடத்துதல் ஆகியன இந்தத் தொகுதிகளின் கூட்டுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதிக்கு ஆதரவான கம்பஹா மாவட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய கம்பஹா மாவட்ட ஜனாதிபதி தேர்தல் கூட்டு வழிநடத்தல் குழுவின் நியமனம் கடந்த வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.
கம்பஹா மாவட்ட மொட்டு கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவர் லசந்த அழகியவன்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Esta historia es de la edición August 12, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 12, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
காஷ்மீரில் 5,000 பேருக்கு டெங்கு
காஷ்மீரில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஷார்ஜாவில் புதன்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
சம்பியன்ஸ் லீக்: ஆர்சனலை வென்ற மிலன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுடனான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ஷகீன் ஷா அஃப்ரிடி
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆவிகளின் நடமாட்டம்?
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் ஆவிகள் உலாவுவதாகவும் இரவு நேரத்தில் மர்ம சப்தம் எழுகிறது என்றும் பல கதைகள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் குசல் பெரேரா
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கையின் குழாமில் குசல் பெரேரா, மொஹமட் சிராஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ட்ரம்ப்பின் முதல் உரையாடல் மோடியுடன்
உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
மு.கா. தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்; ஒருவர் கைது
பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியைகளுக்கு கௌரவம்
களுத்துறை-அகலவத்தை, டார்டன்பீல்ட் பகுதியில் இயங்கிவரும் கணபதி அறநெறி பாடசாலை ஆசிரியைகளுக்குத் தன்னார்வ பணிகளைக் கௌரவிக்கும் முகமாக ஆசிரியர்களுக்குக் கௌரவ நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.