'நோக்கம்' பிரகடனம், இந்திய இலங்கைக்கு இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவூட்டுவதுடன் நெருக்கமான எதிர்கால உறவுகளுக்கும் வழி வகுக்கும். உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை 'உலகின் தெற்கு நாடுகளின் குரல்' மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (AMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும். இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடனும், ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
'உலகின் தெற்கு நாடுகளின் குரல்' மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
"நிலைபேறான எதிர்காலத்திற்கான வலுவூட்டப்பட்ட உலகின் தெற்கு நாடுகள்" என்ற தொளிப்பொருளின் கீழ் மூன்றாவது முறையாக தடைபெறும் இந்த மாநாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. உலகளாவிய தலைமைத்துவத்தில் மேற்கிற்கு இனிமேலும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில், உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
உலகிள் தெற்கு நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு 'உலகின் தெற்கு நாடுகளின் குரல்" மாநாடு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Esta historia es de la edición August 19, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 19, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நிலநடுக்கத்தின் எதிரொலி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து, சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
மெஸ்ஸி, சுவாரஸுடன் இணையும் நெய்மர்?
ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் தனது முன்னாள் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் சக வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸுடன் மீள இணைவது சுவாரஸ்யத்துக்குரிய விடயமென பிரேஸிலின் முன்களவீரரான நெய்மர் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்வதை மறுக்கவில்லை.
சீமெந்து முடைகளை திருடியவர் தப்பியோட்டம்
காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூடைகளை திருடிய சந்தேக நபர் தப்பியோடி உள்ள நிலையில், அவரை பொலிஸார் தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.
குருக்கள் மீது தாக்குதல்
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாகத் தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு
கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோஹிங்யா முஸ்லிம்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப் பட்டிருந்தனர்.
இந்தியா- இலங்கைக்கு இடையில் “பாலம் வேண்டும்”
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை பல அனுகூலங்களைப் பெறமுடியுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
45 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும்
இம்முறை 45 இலட்சம் மெற்றிக்தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கமத்தொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம்: "நீதி நிலைநாட்டப்படும்”
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
"எதிர்ப்புக்களுக்காக புறக்கணிக்க முடியாது"
எதிர்ப்புக்களுக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, 'கிளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.