IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும்
Tamil Mirror|August 23, 2024
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சி தெரிவித்தார்.
IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும்

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புதன்கிழமை (21) நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற தொளிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன சிறப்புரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பத்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டதாவ் நிர்மாணத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்துவது போன்ற இத்துறையில் பணிபுரிவோர் மீது சுமத்தப்பட்டிருந்த சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் ஈர்க்சுப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமனித்தார்.

Esta historia es de la edición August 23, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 23, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
சம்பியன்ஸ் லீக்: பொலொக்னாவிடம் தோற்ற டொட்டமுண்ட்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: பொலொக்னாவிடம் தோற்ற டொட்டமுண்ட்

சமநிலையில் ஜூவென்டஸ் - ப்ரூகே போட்டி

time-read
1 min  |
January 23, 2025
Tamil Mirror

“கல்முனை விவகாரத்துக்கு விரைவில் இறுதி முடிவு”

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடி இறுதி முடிவை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.என்.எச். அபயரட்ண தெரிவித்தார்.

time-read
1 min  |
January 23, 2025
இந்திய பிரஜையின் பொதியுடன் ஒருவர் கைது
Tamil Mirror

இந்திய பிரஜையின் பொதியுடன் ஒருவர் கைது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்தியப் பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் புதன்கிழமை(22) கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

time-read
1 min  |
January 23, 2025
உக்ரைன் போர் விவகாரம்: புட்டினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
Tamil Mirror

உக்ரைன் போர் விவகாரம்: புட்டினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
January 23, 2025
இலையந்தடியில் 2000 கி.கி.மஞ்சள் மீட்பு
Tamil Mirror

இலையந்தடியில் 2000 கி.கி.மஞ்சள் மீட்பு

கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலையந்தடி கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்குத் தயாராக இருந்த ஒரு தொகை மஞ்சள் மூடைகளுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 23, 2025
"துப்பாக்கிச் சூடுகளுக்கு தீர்வு காண வேண்டும்”
Tamil Mirror

"துப்பாக்கிச் சூடுகளுக்கு தீர்வு காண வேண்டும்”

நாட்டில் கடந்த 2024 இல் 121 துப்பாக்கிச் சூடுகளும் 60 கொலைகளும் நடந்துள்ளன.

time-read
1 min  |
January 23, 2025
கார் விபத்தில் ஒருவர் மரணம்
Tamil Mirror

கார் விபத்தில் ஒருவர் மரணம்

கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கம்பளை, கிராஉல்ல பகுதியைச் சேர்ந்த மதுர கீர்த்தி குணசேகர (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
January 23, 2025
Tamil Mirror

நான்கு தொடர் தோல்விகளையடுத்து நுரி ஷகினை நீக்கிய டொட்டமுண்ட

ஜேர்மனிய பெண்டெலிஸ்கா தொடரில் தடுமாறுவதோடு, ஜேர்மனிய கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டதையடுத்து தலைமைப் பயிற்றுவிப்பாளர் நுரி ஷகினை பொரூசியா டொட்டமுண்ட் நீக்கியுள்ளது.

time-read
1 min  |
January 23, 2025
10 பொருட்களின் விலைகள் குறைப்பு
Tamil Mirror

10 பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய 10 பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 23, 2025
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு முன்னேறிய சௌட் ஷகீல்
Tamil Mirror

துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு முன்னேறிய சௌட் ஷகீல்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் சௌட் ஷகீல் முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
January 23, 2025