அவர் அமரத்துவம் அடைந்த செப்டெம்பர் 5ஆம் திகதியினை ஞாபகார்த்த நாளாகக் கருதி, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் எடுக்கப்பட்ட A/RES/67/105 தீர்மானப்படி, சர்வதேச தொண்டு தினம் 2013ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன. 26ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1910ஆம் ஆண்டு அல்பேனியாவின் ஸ்கோப்ஜே கிராமத்தில் (தற்போதுள்ள வட மெசிடோனியக் குடியரசு) பிறந்த அன்னை தெரெசாவின் இயற் பெயர் 'எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ இந்தியாவில் உள்ள கல்கத்தா நகரில் காணப்பட்ட குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
உலகம் முழுவதும் வாழ்ந்த நலிவுற்றவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கப் பவ நாடுகளில் தனது அமைப்பிள் கிளைகளை நிறுவியவர்.
1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை அன்னை தெரேசா பெற்றார். 1980ஆம் அண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது. காப்ரியேல் விருது.
அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். இவர் அன்னை தெரேசா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
வாழ்ந்த போதே ஒரு மனிதருக்கு அஞ்சவ் தவை வெளியிட்ட முதல் பெருமை 'அன்னை தெரேசா'வுக்கு மட்டுமே உரியது.
தனது 18ஆவது வயதில் தொண்டுப் பணியைக் கல்கத்தாவில் ஆரம்பித்து, சுமார் 45 வருடங்களுக்கு மேலான தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய சேவையை மக்களுக்கு ஆற்றிய அன்னை தெரேசா, தனது 87ஆவது வயதினில், செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி 1997ஆம் ஆண்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கிச் சென்றார்.
2011ஆம் ஆண்டு ஹங்கேரி பாராளுமன்றம் அன்னை தெரெசாவின் இறப்பு தினத்தைத் தேசிய விடுமுறையாக அறிவித்தது.
இவரின் இறப்புக்குப் பின், 2016ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால், அன்னை தெரேசா அவர்கள் முக்தி பேறு அடைந்தவராக அறிவித்து, கொல்கத்தாவின் 'அருளாளர் தெரேசா' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட இத்தினத்தினை, அல்பேனியா தேசமானது பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது.
Esta historia es de la edición September 05, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 05, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
26 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை கைது
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முடிவுக்கு வருகிறது
போ கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேல், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமநிலையில் சிற்றி பெய்னூர்ட் போட்டி
பரிஸ் ஸா ஜெர்மனை வென்ற பெயேர்ண் மியூனிச்
வேல் கொடுத்த ரஷ்யர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு, 6 அடி உயரம் கொண்ட வேலை, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
இரு அவைகளிலும் அமளி துமளி
கே ள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்த விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிச தொடர் அமளியில் ஈடுபட்டன.
அழகு படுத்தும் வேலைத்திட்டம்
கற்பிட்டி வீதி பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வு
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால் அப்பிரதேச வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்.பியின் வாகனம் தடாகத்துக்குள் பாய்ந்தது
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை (26) மாலை விழுந்து விபத்துக்குள்ளானது.