ஏப்ரல் மாதமளவில் பெறுமதி சேர் வரி (VAT) நீக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) வரம்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார். இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, புதன்கிழமை (18) நாடு திரும்பிய ஜனாதிபதி, பாராளுமன்றத்துக்கு வந்து உரையாற்றும் போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
2028 ஆம் ஆண்டிளவில் கடன் செலுத்தப்படவிருப்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்ற எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது. 2028 இலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் 2022 - 2023 களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.
எமது வெளிநாட்டு கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நாம் இருக்கிறோம். 15.1 டொலர் பில்லியன்களை ஈட்டிக்கொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி நாம் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீனாய்வை ஆரம்பித்தோம். இரண்டாவது மீளாய்வில் முன்னைய அரசாங்கத்தினால் எட்டப்பட்ட அடைவுகள், இணக்கப்பாடுகள் பல காணப்பட்டன.
Esta historia es de la edición December 19, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 19, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விலங்குகளுக்கும் எலிக்காய்ச்சல்?
வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு விலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களகத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ். வசீகரன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி
நைஜீரியாவில், பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில், நேற்று (19), தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கைக் குழாம் அறிவிப்பு
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமை இலங்கை பெயரிட்டுள்ளது.
முதலாமிடத்துக்கு முன்னேறினார் றூட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பா ட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
12 இந்தியர்களின் சடலங்கள் மீட்பு
ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர்.
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
கான்ஸ்டபிளை போத்தலால் தாக்கிய சாரதி கைது
விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மதுபான போத்தலை உடைத்து கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.
“அஸ்வெசுமவுக்கு இலகு ஏற்பாடு"
அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.