உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்வதை எதிர்த்தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங்களில், திராவிடர் கழகத்தின் சார்பில் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாட்டின் நீதித்துறை மிக முக்கியமானது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நீதித்துறையின் மாண்பும், சுதந்திரமும் பாதுகாக்கப்படவேண்டும்.
மக்களாட்சியின் கடைசி நம்பிக்கை நீதிமன்றமே!
மக்களாட்சியில், மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களேயாகும்.
நிர்வாகத் துறையின் ஆணைகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? என்பதை நிர்ணயிக்கும் கடமையும், பொறுப்பும் நீதித்துறையின் அதிகாரமாக இருப்பதால், இத்துறை அந்த இருபெரும் துறைகளைவிட சக்திவாய்ந்ததாகும்!
நம் நாட்டில் உலகில் எங்குமில்லாத ஜாதி, தீண்டாமை பேதம் வளர்க்கும் சமூக அமைப்பு இருப்பதால், வழக்குரைஞர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவோர் மாவட்ட நீதிபதிகளிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை நியமனம் செய்தாலும், அறிந்தோ அறியாமலோ ஜாதி உணர்வு, ஆதிக்க மனப்பான்மையிலிருந்து விலகி நீதிபதி போன்று நடுநிலை நின்று, ‘ஓர்ந்து கண்ணோடாது' தேர்ந்த நீதிபரிபாலனம் செய்ய இயலாத நிலை.
வேறு சிலர் தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளின் சிந்தனை வட்டத்திலிருந்து வெளியே வர முடியாதவர்கள், நீதித் தராசு சாயவும் செய்கிறது!
அரசமைப்புச் சட்டம் சமூகநீதியை வற்புறுத்தினாலும்,
சமூக அநீதியே தலைவிரித்தாடுகிறது!
சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே (Preamble) வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய கோட்பாடு.
ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக அநீதியே பெரிதும் கோலோச்சுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்!
நடைபெறுவது மக்களாட்சி, ‘‘ஜனநாயகக் குடியரசு'' - (Democratic Republic) மக்கள் பிரதிநிதித்துவம், மக்கள் பங்களிப்பும் அவர்களது உரிமை!
Esta historia es de la edición February 07, 2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 07, 2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!