மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது 'பாவ தொழில்' என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த சுமார் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்' ஆட்சியில், தமிழ்நாடு பல துறைகளில் ஓர் ‘அமைதிப் புரட்சியை' சந்தித்து மகிழ்ந்து வருகிறது. வாழும் வயிற்றிற்கெல்லாம் சோறிடும் மிக இன்றியமையாத துறைதான் வேளாண்மைத் துறை; அதுமட்டுமல்ல, மனித நாகரிகத்தின் திருப்பமும் வேளாண்மையே ஆகும்.
வேளாண் என்பது மனிதகுலத்தின்
வளர்ச்சிக்கு அடையாளம்!
காட்டுமிராண்டித்தனமாய் அலைந்து திரிந்து, உணவை வேட்டையாடிச் சேகரித்த தொடக்கால மனித குலம், பிறகு நாகரிகம் அடைந்ததின் அடையாளமே வேளாண்மைத் துறை.
மற்றவர்கள் நாடோடிகளாக (Nomadic) இருந்த நிலையை மாற்றி அவர்களை இருப்புக் கொள்ளச் செய்த புத்தாக்கம் தான் - நிலத்தை உழுது பயிரிட்டு மனித குலத்தைப் பட்டினியிலிருந்து பாதுகாத்துவரும் துறை வேளாண்மைத் துறை!
அத்துறையை மேலும் வளப்படுத்தி இன்றைய அறிவியல், மின்னணுவியல் வளர்ச்சியைப் புகுத்தி, புதிய ஆக்கப்பூர்வ சாதனைகளைச் செய்து, நமது வேளாண் பெருமக்களாக உள்ளவர்கள் ‘கடனிலே பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலேயே மறைந்து, தனக்குப் பின்வரும் சந்ததியினருக்கும் கடனையே' விட்டுச் செல்லும் பாரம்பரிய பரிதாப நிலைக்கு முடிவு கட்டி, தமிழ்நாட்டு வேளாண் பெருமக்களின் வாழ்வில் புதுவசந்தத்தை உருவாக்கவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெடுத்த குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று!
மூன்றாம் முறையாக வேளாண் பட்ஜெட்!
Esta historia es de la edición March 22,2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 22,2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!