அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடன் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று (14.7.2023) காலை தமிழ்நாடெங்கும் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்ட வர்க்கும் இதுவரை வாய்ப்புகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not Mandatory; it is Preferable) என்று விளம்பரப்படுத்தி வருகிறது.
வெளி மாநிலத்தவர்கள் அதிகரிப்பு!
இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது 2022-2023ஆம் ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று, 288 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா - 87, கனரா வங்கி - 100, பாங்க் ஆஃப் இந்தியா-17, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 66, யூகோ வங்கி - 16, பஞ்சாப் & சிந்த் வங்கி - 2 மொத்தம் - 288.
ஆறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 288 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டும் வெளி மாநிலத் தவர்கள், தமிழ்மொழி தெரியாதவர்கள் பணியில் சேர உள்ளனர்.
தமிழ் தெரியாமல்...
தொடர்ந்து 2017 முதல் இதே போன்று வெளி மாநிலத்தவர், கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பித்து, தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர். சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளி மாநிலத்தவர் இவ்வாறு வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
Esta historia es de la edición July 14, 2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 14, 2023 de Viduthalai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!