பார்த்த போது புதுசா இருந்தது, செய்யலாம்னு தோணுச்சு, அப்படித்தான் 'இந்திரா டிரங்க்ஸ்' என்ற நடமாடும் டிரங்க் பெட்டி பொட்டிக்கினை துவங்கினோம்" என்று பேசத் துவங்கினார் திலீப்.
"நாங்க சென்னைதான். சவுகார் பேட்டையில் எங்களுக்கு ஃபேன்சி கடை ஒன்று இருக்கு. அதனை என் அப்பா, தம்பி மற்றும் நான் மூவரும் சேர்ந்துதான் நடத்தி வருகிறோம். நான் தனியாக ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்தேன். புதிதாக ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனம் வாங்க விரும் புபவர்களுக்கு அதனை விற்பனை செய்து வந்தேன். ஆனால் கொரோனாவின் போது, ஊரடங்கு காரணமாக கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதும், தொழிலை பழையபடி துவங்கினேன். ஆனால், அந்த சமயத்தில் யாரும் புதிய வாகனம் வாங்க முன்வரவில்லை. கடையை தினமும் திறப்பேன். வாடிக்கையாளர்கள் யாரும் வரமாட்டாங்க. துவங்கினோம்" என்றவரை தொடர்ந்தார் தீபா.
"அவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்த போது, கடையை பார்த்துக்கொள்ள காலையிலேயே கிளம்பிடுவார். வீட்டில் சமையல் நேரம் போக மற்ற வேளை சும்மாதான் இருந்தேன். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க விரும்பினேன். வீட்டில் இருந்தபடியே ஏதாவது ஒரு தொழில் செய்கிறேன்னு சொன்னாலும், என்ன செய்வதுன்னு எனக்கு தெரியல. அந்த சமயத்தில் என் உறவினர் ஒருவர் மூலம் இந்த பிசினஸ் பற்றி தெரிய வந்தது. அவர் பிரான்சைசி மூலமாகத்தான் செய்து வருகிறார். ஓரள விற்கு நல்ல லாபம் பார்க்க முடிகிறது என்றார். அவர் ராஜஸ்தானில் இதை செய்து வருகிறார். சென்னை மக்களுக்கு இது புதுசு என்பதால், எங்களுக்கும் சரின்னு பட்டது, உடனே தொடர்பு கொண்டு அதற்கான பிரான்சைசியினை எடுத்தோம்" என்றவர் டிரங்க்பெட்டி பொட்டிக் பற்றி விவரித்தார்.
"இதனை முதன் முதலில் சூரத்தில் உள்ள ஒருவர்தான் பிசினசாக ஆரம்பித்துள்ளார். சூரத் காட்டன் மற்றும் அனைத்து உடைகளுக்கும் பிரபலம். மேலும் அங்கிருந்து தான் மற்ற ஊர்களுக்கு உடைகள் எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது. அவரை என் உறவினர் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம்.
Esta historia es de la edición 1-15, May 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 1-15, May 2023 de Thozhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.